அசத்தி விட்டான் "உலக நாயகன்".. தனக்குத் தானே பாராட்டிக் கொண்ட கெய்ல்!
மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியில் பேயாட்டம் ஆடி விட்ட கிறிஸ் கெய்லுக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டுள்ளன. இந்த நிலையில் தன்னை உலக நாயகன் என்று தனக்குத் தானே பாராட்டியுள்ளார் கெய்ல்.
மேற்கு இந்தியத் தீவுகளுக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான உலகக் கோப்பை டி20 போட்டியில் கெய்ல் புயல் போல சுழன்றடித்தார். வெறும் 48 பந்துகளில் அவர் சதம் போட்டு அசத்தி விட்டார்.
மேலும் சிக்ஸர்களையும் அள்ளி விளாசி உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக அளவிலால சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

2 சதம் போட்ட ஒரே வீரர்
டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் 2 சதம் போட்ட ஒரே வீரர் கெய்ல்தான். மேலும் டி 20 சர்வதேசப் போடடிகளில் அதி வேகமாக எடுக்கப்பட்ட 3வது சதம் இதுவாகும்.

11 சிக்ஸர்கள்
இந்தப் போட்டியில் 11 சிக்ஸர்களை விளாசினார் கெய்ல். 5 பவுண்டரிகளையும் அவர் விளாசினார். இங்கிலாந்து எடுத்திருந்த 182 ரன்களை மிக ஈஸியாக சேஸ் செய்ய கெய்லின் அதிரடி உதவியது.

அதிரடி ஆட்டம்
கெய்லின் அதிரடி ஆட்டம் பலரையும் ஆட்டம் காண வைத்துள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கு மிகப் பெரிய மிரட்டலாக வந்துள்ளார் கெய்ல்.

உலக நாயகன்
இந்த நிலையில் தனது ஆட்டம் குறித்து கெய்ல் தனக்குத் தானே புகழ்ந்துள்ளார். உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே உலக நாயகன் (universe boss) அசத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. அவன் அசத்தி விட்டான் என்று கூறியுள்ளார் கெய்ல்.


Click it and Unblock the Notifications