சென்னை சூப்பர் கிங்ஸ்ல சேரனும்... தீபிகா படுகோனேவுடன் செல்பி எடுக்கனும்... இதெல்லாம் கெய்ல் ஆசை
சென்னை: டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற வேண்டும் என்று விரும்புவதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்ட்டிகளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்றிருப்பவர் கெய்ல். இவரது புயல் வேக ஆட்டமே பலரையும் எதிரணியினரையும் ரசிகர்களாக்கி வைத்திருக்கிறது.

சென்னையில் முகாம்
தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் பிராவோ, கெய்ல் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக இருவரும் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
வேலம்மாள் பள்ளியில்
இதனிடையே சென்னை வேலம்மாள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கெய்ல் பங்கேற்றார். அப்போது மாணவர்கள் அவரிடம் ஜாலியாக கேள்விகளைக் கேட்டனர்.

சிஎஸ்கேவில்?
அதில் ஒரு கேள்வி, எதிர்காலத்தில் நீங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேருவீர்களா என்பது.. இதற்கு பதில் தந்த கெய்ல், ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் இடம்பெறும்போது நான் டோணியிடம் பேசுவேன் என்றார்.

தீபிகா படுகோனே..
மற்றொன்று நீங்க ஆட்டோகிராப் வாங்க விரும்பும் பிரபலம் யார்? என்பது... இதற்கு, யாருங்க இப்ப ஆட்டோகிராப் வாங்குறாங்க... தீபிகா படுகோனேவுடன் செல்பி எடுக்கத்தான் எனக்கு ஆசை என்று ஒரே போடாகப் போட்டார் கெய்ல்.


Click it and Unblock the Notifications