For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

6 ரன்கள் தான் பாக்கி... மிக பெரிய சாதனைக்கு காத்திருக்கிறார் இந்த யுனிவர்ஸ் பாஸ்

Recommended Video

IPL 2019: Chris Gayle: 6 ரன்கள் தான் பாக்கி, சாதனைக்கு காத்திருக்கிறார் கிறிஸ் கெய்ல்- வீடியோ

மும்பை: அதிரடி பேட்டிங்கால் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கொள்ளையடித்த கிறிஸ் கெய்ல், இன்னும் 6 ரன்கள் அடித்தால் ஐபிஎல் தொடரில் 4000 ரன்களை எட்டிய 2வது வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைப்பார்.

ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெய்ல் தற்போது பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகின்றார்.தன் அதிரடி பேட்டிங்கால் உலக கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டிருக்கிறார்.

இன்று நடக்க இருக்கும் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியின் போது கெய்ல் வெறும் 6 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் தொடர்களில் 4,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.

யார்? யார்?

யார்? யார்?

இதற்கு முன்னதாக 4000 ரன்களை கடந்த வீரர்கள் யார், யார் என்று பார்க்கலாம்:

  • சுரேஷ் ரெய்னா - 177 போட்டிகள் 5004 ரன்கள்
  • விராட் கோலி - 164 போட்டிகள் 4954 ரன்கள்
  • தோனி - 176 இன்னிங்ஸ் 4016 ரன்கள்
  • கெய்ல் - 112 இன்னிங்ஸ் 3994 ரன்கள்
6 ரன்கள் பாக்கி

6 ரன்கள் பாக்கி

அந்த வரிசையில் கெய்ல் 4வது இடத்தில் இருக்கிறார். இன்னும் 6 ரன்கள் எடுத்தால் 4000 ரன்களை கடந்து சாதனையை படைக்க உள்ளார். முன்னதாக ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்ஸில் 175 ரன்கள் எடுத்து அதிகபட்ச ரன் எடுத்த வீரர்களில் அவர் முதலிடத்தில் உள்ளார்.

மற்ற வீரர்கள்

மற்ற வீரர்கள்

ஐபிஎல் தொடரில் அதிகளவு இந்திய வீரர்கள் 4000 ரன்களை கடந்துள்ளனர். சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, தோனி, ராபின் உத்தப்பா, தவான், கம்பீர் ஆகியோர் ஏற்கனவே 4000 ஆயிரம் ரன்களை கடந்தவர்கள் என்ற பட்டியலில் உள்ளனர். அதில் கம்பீர் ஓய்வு பெற்றுவிட்டார். இம்முறை 6 ரன்களை எடுத்தால் வார்னருக்கு அடுத்தபடியாக 4000 ரன்களை எடுக்கும் 2வது வெளிநாட்டு வீரர் எனற் பெருமையை கெயில் பெறுவார்.

424 ரன்கள் குவித்தார்

424 ரன்கள் குவித்தார்

வரும் உலக கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டி தொடர்களிலிருந்து ஓய்வு பெறுவதாக கெய்ல் ஏற்கனவே அறிவித்திருந்தார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 4 போட்டிகளில் அதில் 20 பவுண்டரிகள், 39 சிக்சர்களுடன் 424 ரன்கள் குவித்தார்.

Story first published: Monday, March 25, 2019, 12:34 [IST]
Other articles published on Mar 25, 2019
English summary
Chris Gayle Closing in on 4000 Runs in Indian T20 League, Set to Become The 2nd Foreigner to Achieve This Feat.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+