Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இயற்கை எழில் கொஞ்ச.. வீட்டையே ஜிம்மாக மாற்றிய வீரர்கள்... சூப்பர் ஹீரோவாக மாறிய கெயில் !

கிங்ஸ்டன் : உலக சுகாதார அமைப்பின் 'வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்' என்ற சேலஞ்சை கையிலெடுத்துள்ளார் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெயில். சூப்பர் ஹீரோவாக மாறி அவர் தன்னுடைய வீட்டில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இதேபோல இந்திய வீரர் ஷிகர் தவானும் இயற்கை சூழலில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Chris Gayle works out wearing Superhero-like suit

உலகெங்கிலும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் ரத்து அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொண்டு குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் செலவிட்டு வருகின்றனர். ஆயினும் வொர்க் அவுட் செய்வதை மட்டும் அவர்கள் மறக்கவில்லை.

உலக அளவில் கொரோனாவின் பாதிப்பு அச்சுறுத்திவரும் நிலையில் சர்வதேச அளவில் பல முக்கிய விளையாட்டு போட்டிகள் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் எப்போதும் இல்லாத வகையில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு போதிய ஓய்வு கிடைத்துள்ளது. கிடைத்த ஓய்வை அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் செலவிட்டு வருகின்றனர்.

Chris Gayle works out wearing Superhero-like suit

ஆயினும் தங்களது உடல்நலத்தில் எப்போதுமே அக்கறை கொண்ட அவர்கள், வொர்க் அவுட் செய்வதை மட்டும் விடுவதாயில்லை. வீட்டிலேயே அவர்கள் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. இந்திய துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், இயற்கை சூழலில் தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். மேலும் அனைவரும் வலிமையுடன் இருக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேபோல இங்கிலாந்து மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரருமான பென் ஸ்டோக்சும் தன்னுடைய வீட்டிலேயே தான் பயிற்சி எடுக்கும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் எதையுமே வித்தியாசமாகவும் நகைச்சுவை உணர்வுடனும் பதிவு செய்யும் மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெயில், ஒருபடி மேலே சென்று சூப்பர் ஹீரோவாகவே மாறியுள்ளார்.

Chris Gayle works out wearing Superhero-like suit

உலக சுகாதார அமைப்பின் 'வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்' என்ற சேலஞ்சை கையிலெடுத்துள்ள அவர், சூப்பர் ஹீரோவாக உடையணிந்து, வொர்க் அவுட் செய்யும் வீடியோவை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். பின்புலத்தில் பிரபலமான ஐ ஆப் தி டைகர் பாடல் இசைக்க அவர் செய்யும் வொர்க் அவுட்கள் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்துள்ளது. மொத்தத்தில் விளையாட்டுகள் தள்ளி போனதால் வீரர்கள் ஹாப்பியாகவே உள்ளார்கள் என்பது தெரியவருகிறது.

Story first published: Thursday, March 19, 2020, 19:54 [IST]
Other articles published on Mar 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+