உலக கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக…! அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐசிசி…. நாமும் வாழ்த்துவோம்
துபாய்: கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலாக ஆடவர் கிரிக்கெட் போட்டியில் பெண் நடுவராக ஆஸ்திரேலியாவின் கிளாரே போலோசாக் களமிறங்கி உள்ளார்.
வேர்ல்ட் கிரிக்கெட் லீக் டிவிஷன்தொடரில் இறுதிப்போட்டியில் நமீபியா மற்றும் ஓமன் அணிகள் மோதுகின்றன. அந்த போட்டியில் தான் கிளாரே போலோசாக் நடுவர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ஆடவர் கிரிக்கெட் போட்டியில் இதுவரை நடுவராக ஆண்களே இருந்து வந்துள்ளனர். தற்போது பெண் நடுவராக களமிறங்கி உள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளாரே போலோசாக் வரலாறு படைத்துள்ளார்.
ஐசிசி டுவிட்டர்
ஐசிசி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இந்த சாதனையை பகிர்ந்துள்ளது. மேலும் அவருக்கு வாழ்த்துகளையும் ஐசிசி தெரிவித்துள்ளது.

சிலிர்ப்பு ஏற்பட்டுள்ளது
இதுகுறித்து கிளாரே கூறியிருப்பதாவது: நான் ஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நடுவர் என்பது எனக்கு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. ஆண்கள் கிரிக்கெட்டில் நடுவராகப் பங்கேற்கும் முதல் பெண்மணி என்ற பெருமை அடைகிறேன்.

ஏன் செயல்படக் கூடாது?
பெண் நடுவர்களை முன்னிறுத்துவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பெண்கள் ஏன் கள நடுவராக செயல்படக்கூடாது? இது பெண்களுக்கு எதிராக இருக்கும் பல்வேறு தடைகளை உடைப்பதாக இருக்கும்.

விழிப்புணர்வு வேண்டும்
இது பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும். இதன்மூலம் அதிகமான பெண்கள் இந்தத் துறைக்கு ஆர்வத்துடன் வந்து சாதிப்பார்கள் என்றார்.

முதல் போட்டி எப்போது?
31 வயதாகும் கிளாரே 2016ம் ஆண்டு நவம்பர் முதல் நடுவராக பணியாற்றி வருகிறார். இதுவரை பெண்கள் கிரிக்கெட்டில் 15 ஒரு நாள் போட்டியில் நடுவராகச் செயல்பட்டுள்ளார். நவம்பர் 2016ம் ஆண்டு ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியே இவரது முதல் போட்டியாகும்.


Click it and Unblock the Notifications