For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலி Vs கங்குலி - யார் மீது தான் தவறு.. இரண்டு பேருக்கும் அப்படி என்ன பிரச்சினை?

மும்பை : நாணயத்திற்கு இரு பக்கமும் இருப்பது போல், கங்குலி, கோலி விவகாரத்தில் இருவர் மீதும் தவறு இருக்கிறது.. யார் மீது தவறு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முதலில் நாம் முழு கதையையும் தெரிந்து கொள்ள வேண்டும்..இருத்தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும். இல்லையெனில் விருமாண்டி கதை போல் தான் ஆகிவிடும்.

ரவி சாஸ்திரி இந்திய அணியின் தோனி காலத்தில் இயக்குனராக நியமிக்கப்பட்ட போது ஒரு முக்கிய தொடரில் அவர் அணியுடன் இல்லாமல் கிரிக்கெட் வர்ணனை செய்வதற்காக ஆஷஸ் தொடருக்காக இங்கிலாந்து சென்று விட்டார். இது பிசிசிஐ நிர்வாகிகளிடையே கடுப்படையை செய்தது. அதன் பிறகு பிசிசிஐயால் நியமிக்கப்பட்ட ஆலோசனை குழு அடுத்த பயிற்சியாளரை நியமிக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்த குழுவில் சச்சின்,கங்குலி, லக்ஷ்மன் ஆகியோர் இருந்தனர். இந்த குழு நேர்முகத் தேர்வுக்காக பயிற்சியாளர்கள் பொறுப்புக்கு விண்ணப்பித்தவர்களை அழைத்தது. ஆனால் ரவி சாஸ்திரி நேர்முகத் தேர்வில் பங்கேற்காமல் வெளிநாட்டில் இன்பச் சுற்றுலாவில் இருந்தார். மேலும் அங்கிருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நேர்முகத் தேர்வில் பங்கேற்கிறேன் என்று கூறினார்.

ஆரம்ப புள்ளி

ஆரம்ப புள்ளி

அதாவது என்னுடைய ஜூனியர்களிடம் நான் இன்டர்வியூவிற்கு வருவதா என்று ஈகோ மோதல் தான் இதற்கு காரணம். கங்குலிக்கு இது சுத்தமாக பிடிக்காமல், அவர் ரவி சாஸ்திரியிடம் கேள்வி கேட்காமல் சென்று விட்டார். இதனை அடுத்து பயிற்சியாளராக ஆவதற்கு course தனியாக படித்த அணில் கும்ப்ளே தகுதியான நபராக தெரிந்தார்.இதனால் இந்த குழு அணில் கும்ப்ளேவை பயிற்சியாளராக நியமித்தது. கும்ப்ளே இந்த தலைமுறை வீரர்.. பயிற்சி செய்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்ற பாலிசியை கொண்டவர். இதனால் விராட் கோலிக்கும் கும்ப்ளேக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இதனால் தங்களுக்கு இந்த பயிற்சியாளர் வேண்டாம் என்றும், ரவி சாஸ்திரி தான் வேண்டும் என்றும் விராட் கோலி பிசிசிஐக்கு ஒரு கடிதம் எழுதினார்.

கும்ப்ளே ராஜினாமா

கும்ப்ளே ராஜினாமா

அப்போது விராட் கோலி பேட்டிங்கில் சதம் சதமாக விளாசி வந்தார். கேப்டன் இப்படி கேட்கிறார், ஆனால் கும்ப்ளேவை எப்படி நாம் வெளியே அனுப்புவது என யோசித்த நிலையில் , கும்ப்ளே தானாகவே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்றார். தங்களுக்கு ரவி சாஸ்திரி தான் வேண்டும் என அடம்பிடித்து கோலி அவரை வரவழைத்தார். ரவி சாஸ்திரி கோலி ஜோடி இணைந்து பல தவறுகளை செய்தாலும் , டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா சிறந்து விளங்கியது என்று கூறலாம்.

கங்குலி ரிட்டர்ன்ஸ்

கங்குலி ரிட்டர்ன்ஸ்

இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் புஜாரா ,ரகானே போன்ற முக்கிய வீரர்களை சில போட்டிகளில் காரணமே இல்லாமல் நீக்கியது. அஸ்வினுக்கு வாய்ப்பு தராதது என பல சேட்டைகளை செய்தனர். 2019 உலககோப்பை அணி தேர்வில் குழப்பம் இதில் ஹைலைட். நன்றாக படிக்கும் மாணவன் ஏதேனும் தவறு செய்தால் ஆசிரியர்கள் மன்னித்து விடுவார்களே, அதே போல் பிசிசிஐயும் இந்த கூட்டணியை தடுக்காமல் விட்டது.ஆனால் இது கங்குலிக்கு பெரிய மானப் பிரச்சனையாக மாறியது. நான் வேண்டாம் என்று நீக்கிய நபரை நீ உள்ளே அழைத்து வந்தாய் அல்லவா ? இனி நீ பெரியவனா நான் பெரியவனா என்று மோதி பார்த்து விடுவோம் என நினைத்த கங்குலி இதற்காக ஜெய்ஷாவுடன் இணைந்து பேசி தலைவர் பொறுப்புக்கு வந்தார்.

ரவி சாஸ்த்ரி ராஜினாமா

ரவி சாஸ்த்ரி ராஜினாமா

உங்களுக்கெல்லாம் மேலே வந்து விட்டேன் பார்த்தியா அப்படி என்ற தோணியில் நடந்து கொண்டார் கங்குலி. அப்படி வந்தும் நேரடியாக நடவடிக்கைகள் எடுக்காமல் வாய்ப்புக்காக கங்குலி காத்திருந்தார். விராட் கோலி, ரவி சாஸ்திரி கூட்டணி 2021 டி20 உலக கோப்பையில் தோற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோற்றது. இதை காரணம் காட்டி பயிற்சியாளரை மாற்ற வேண்டும் என கங்குலி முடிவெடுத்தார்.தமக்கு கட்டம் கட்டி விட்டார்கள் இனி நாம் தாக்குப் பிடிக்க முடியாது என உணர்ந்த ரவி சாஸ்திரி. தானாகவே தனது பதவியை ராஜினாமா செய்தார். கங்குலியால் நமக்கும் பிரச்சனை இருக்கிறது என உணர்ந்து கொண்ட விராட் கோலி டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகிவிடுகிறேன். ஆனால் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணியில் தொடர்ந்து கேப்டனாக இருக்கிறேன் என முடிவெடுத்தார்.

ஈகோ பிரச்சினை

ஈகோ பிரச்சினை

ஆனால் இதற்கு கங்குலி ஒப்புக்கொள்ளவில்லை. நீ டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினால், ஒரு நாள் போட்டிக்கு ஒரு கேப்டன், டி20 க்கு ஒரு கேப்டன் என இரண்டு பேரை வைக்க முடியாது என்று ஒரு யாக்கர் பந்து வீசினார். இங்குதான் கங்குலியின் ராஜதந்திரத்தை பார்க்க வேண்டும். உன் மீது எனக்கு கோபம் இருக்கிறது. ஆனால் நான் உன் மீது நடவடிக்கை எடுக்க மாட்டேன். நீயாக டி20 பொறுப்பிலிருந்து சென்று விட்டாலும், இதனால் தான் நாங்கள் ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்தும் உன்னை அனுப்பினோம் என்று கூற காரணத்தையும் கங்குலி உருவாக்கிக் கொண்டார்.தம்மால் டி20 கேப்டனாக தொடர முடியாது என முடிவெடுக்கிறார் கோலி. பதவியை ராஜினாமா செய்கிறார். இதனால் டி20 ஒருநாள் போட்டிக்கு இரண்டு கேப்டன்கள் இருக்க முடியாது என்ற காரணத்தைக் காட்டி கங்குலி ஒருநாள் அணி பொறுப்பிலிருந்தும் நீக்கி விட்டார். இது முழுக்க முழுக்க இரண்டு ஜாம்பவான்களின் ஈகோ போர் தான் காரணம்.

மருதமலை காமெடி

மருதமலை காமெடி

இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க கங்குலியையும் விமர்சிப்பது தவறு, அதேசமயம் கோலி தான் காரணம் என்று சொல்வதும் தவறு. மருதமலை படத்தில் புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும் என்று நான் கனவா கண்டேன் என்று வடிவேல் கூறுவது போல் , கங்குலி பிசிசிஐ தலைவராக வருவார் என்று கோலி நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்.

இன்று இவர் கீழே இருக்கிறார் என நினைத்து நாம் அவரை துச்சமாக நினைத்தால் நாளை அந்த நபர் நமக்கு மேலே வந்து நம்மை பழிவாங்குவார். இதுதான் கங்குலி ரவி சாஸ்திரி விராட் கோலி ஆகியோர் மத்தியில் நடந்தது.

யார் மீது தவறு?

யார் மீது தவறு?

உடனே விராட் கோலி ரசிகர்கள் கங்குலி தான் இதற்கெல்லாம் காரணம் என்று ஒரு மாயத்தை உருவாக்குகிறார்கள். இதற்கு பின் நடந்த கதை தெரியாமல் பலரும் கங்குலி மீது தான் தவறு என நினைக்கிறார்கள் .இந்த இடத்தில் தான் தோனி, பதவியில் இருந்த பிசிசிஐ தலைவர் சீனிவாசனையை தமது தளபதியாய் ஆக்கிக் கொண்டார். இதனை செய்ய விராட் கோலி தவறி விட்டார். கங்குலியின் முதல் டார்க்கெட் ரவி சாஸ்திரி தான், விராட் கோலி ஒரு collateral damage.இப்போது நீங்கள் முடிவெடுத்துக் கொள்ளுங்கள் யார் மீது தவறு என்று?

Story first published: Thursday, February 16, 2023, 20:13 [IST]
Other articles published on Feb 16, 2023
English summary
clash of the titans Virat kohli vs sourav Ganguly - who is responsible விராட் கோலி Vs கங்குலி - யார் மீது தான் தவறு.. இரண்டு பேருக்கும் அப்படி என்ன பிரச்சினை?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+