Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்.. சொதப்பிய பெங்களூர்.. அசால்டாக 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கிங்ஸ் லெவன்

பெங்களூர்: ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 43வது லீக் போட்டியில், பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

Clinical Punjab thrash Bangalore by 19 runs in a low-scoring game

பெங்களூரு அணியில், கிறிஸ் கெய்ல், சாமுவேல் பத்ரி அணிக்கு திரும்பினர். பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. அக்சர் பட்டேல் 17 பந்தில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனையடுத்து 139 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்டி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி துவக்கம் முதலே சொதப்பியது. கெயில் (0), கேப்டன் கோஹ்லி (6), டிவில்லியர்ஸ் (10) என்று அதிரடி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மந்தீப் சிங் அதிரடியாக விளையாடி 46 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

இதனால் பெங்களூர் அணி 19 ஓவா்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம்19 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி சார்பில் அக்சர் படேல் 3 விக்கெட்களையும், சந்தீப் ஷர்மா 3 விக்கெட்களையும், எம்.எம். ஷர்மா மற்றும் ஜி.ஜெ. மாக்ஸ்வெல் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். பெங்களூர் அணி ஏற்கனவே 'பிளேஆப்' சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, May 6, 2017, 0:29 [IST]
Other articles published on May 6, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+