Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்லோ ஓவர் ரேட்: 8 சிக்ஸர் அடித்த டோணிக்கு ரூ. 92,758 அபராதம்

ராஞ்சி: சாம்பியன்ஸ் லீக் டி 20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோணி 8 சிக்ஸர்கள் அடித்தும் ஸ்லோ ஓவர் ரேட்டுக்காக ரூ. 92,758.94 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் லீக் டி 20 போட்டிகள் நடந்து வருகிறது. நேற்று ராஞ்சியில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

சென்னை சூப்பர் கிங்ஸின் முதல் போட்டியில் பெரிதாக விளையாடாத கேப்டன் டோணி நேற்று இரவு ஆட்டத்தில் தூள் கிளப்பிவிட்டார்.

8 சிக்ஸர்கள்

8 சிக்ஸர்கள்

டோணி 19 பந்துகளில் 63 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருந்து சென்னை அணியின் வெற்றிக்கு உதவினார். டோணி 8 சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் குதிக்க வைத்தார்.

ஸ்லோ ஓவர் ரேட்

ஸ்லோ ஓவர் ரேட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்ன தான் அருமையாக விளையாடினாலும் அவர்களுக்கு ஸ்லோ ஓவர் ரேட்டுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேப்டன் டோணிக்கு ரூ. 92,758.94ம், பிற வீரர்களுக்கு ரூ. 46,383.44ம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சன்ரைசர்ஸுக்கும்

சன்ரைசர்ஸுக்கும்

சென்னை அணிக்கு மட்டுமல்ல ஸ்லோ ஓவர் ரேட்டுக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஸ்கிப்பர் ஷிகார் தவானுக்கு ரூ.92,758.94ம், மற்ற வீரர்களுக்கு ரூ. 46,383.44ம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விருந்து ஒர்க் அவுட் ஆயிடுச்சு

விருந்து ஒர்க் அவுட் ஆயிடுச்சு

கேப்டன் டோணியும், அவரது மனைவி சாக்ஷியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உற்சாகப்படுத்த ராஞ்சியில் உள்ள தங்கள் வீட்டில் நேற்று முன்தினம் இரவு விருந்து வைத்தனர். மறுநாள் இரவு விளையாடிய சென்னை அணி கலக்கல் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, September 27, 2013, 12:05 [IST]
Other articles published on Sep 27, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+