
டெண்டுல்கரின் டபுள் பவுண்டரி
தமது கடைசி 20 ஓவர் போட்டியில் ஆடிய டெண்டுல்கர் வாட்சன் பந்தில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார். ஹாட்ரிக் பவுண்டரி அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஸ்டெம்ப் பறந்து போய் விழ அவுட் ஆனார்.

ரோகித் சர்மாவின் அதிரடி
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 14 பந்தில் 33 ரன்கள் எடுத்து அதிரடி காட்டி அவுட் ஆனார்.

சளைக்காத மேக்ஸ்வெல்
அதேபோல் மேக்ஸ்வெல் 14 பந்தில் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசி 10 ஓவரில் மட்டும் 142 ரன்களைக் குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சிக்சர்கள், பவுண்டரிகள் என விளாசப்பட்டன. 20 ஓவர் முடிவில் 202 ரன்கள் என்ற இலக்கை எட்டியது.

தாம்பே முதலிடம்
ராஜஸ்தான் தரப்பில் தாம்பே 4 ஓவர்கள் பந்து வீசி 19 ரன்களை மட்டும் அளித்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இத்தொடரில் தாம்பே மொத்தம் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

ராஜஸ்தானின் சாம்சன்- ரஹானேவின் ரகளை
ராஜஸ்தான் அணி தொடக்க ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்தது. ஆனால் பின்னர் ஆடிய சாம்சன் - ரஹானே ஜோடி அதகளம் காட்டியது. 33 பந்துகளைச் சந்தித்த சாம்சன் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகள் எடுத்தார். இருவரும் 10 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடக்க வைத்தனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில் சாம்சன் 60 ரன்களிலும் ரஹனே 65 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். ரஹானே 2 சிக்ஸர் 5 பவுண்டரிகள் அடித்திருந்தார்.

கடைசி போட்டியில் சொதப்பிய டிராவிட்
ராஜஸ்தான் அணிக்கு வெற்றிக்கான வாய்ப்பு இருந்தும் பின்வரிசை வீரர்கள் நிலைக்கவில்லை. கேப்டன் ராகுல் டிராவிட்டும் கூட 1 ரன் மட்டுமே அடித்து அவுட் ஆகி சொதப்பிவிட்டார்.

2 ஓவர்களில் 6 விக்கெட்
மும்பை அணியின் ஹர்பஜன் வீசிய 17-வது ஓவரில் 3 விக்கெட்டுகளையும், போலார்ட் வீசிய 19-வது ஓவரில் 3 விக்கெட்டுகளையும் ராஜஸ்தான் இழக்க அந்த அணியின் இன்னிங்ஸ் விரைவில் முடிவுக்கு வந்தது. 33 ரன்களில் ராஜஸ்தான் தோல்வியைத் தழுவி சாம்பியன் பட்டத்தை நழுவ விட்டது.


Click it and Unblock the Notifications











