Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் லீக்: டோணி மின்னல்வேக அரைசதம்! சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது வெற்றி

ராஞ்சி: சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2வது வெற்றியைப் பெற்றது. இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன் டோணி 16 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டியில் நேற்றிரவு ராஞ்சியில் 10-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

டாஸ் ஜெயித்த ஹைதராபாத் கேப்டன் ஷிகர் தவான் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்சின் இன்னிங்சை முரளிவிஜயும், மைக் ஹஸ்சியும் தொடங்கினர். முரளிவிஜய் வழக்கம் போல டக்-அவுட் ஆனார். மைக் ஹஸ்சியுடன் சுரேஷ் ரெய்னா இணைந்து கொண்டார். ஹஸ்சி 23 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

12ஓவர் வரை நிதானம்

12ஓவர் வரை நிதானம்

இதன் பின்னர் இறங்கிய பத்ரிநாத் நிதானமாக விளையாடினார். மறுமுனையில் ரெய்னா ரன்களைக் குவித்து வந்தார். 12 வது ஓவர் வரை மிக நிதானமாக சென்னை அணி ரன்களை குவித்தது.

டோணி புயல்

டோணி புயல்

20 ஒவர் கிரிக்கெட்டில் தனது 25-வது அரைசதத்தை ரெய்னா கடந்தார். பத்ரிநாத் 13 ரன்களில் வெளியேற கேப்டன் டோணி களம் இறங்கினார்.

சிக்சர் மழை

சிக்சர் மழை

சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் கடந்த போட்டியில் ஏமாற்றம் அளித்த டோணி நேற்று செம ரகளையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 18-வது ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் திசரா பெரேராவை டோணி கதி கலங்க வைத்தார். அந்த ஓவரில் மட்டும் டோனி 5 சிக்சர்களை வெளுத்து ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மூழ்கடித்தார். இதில் ஒரு சிக்சர் 101 மீட்டர் தூரத்திற்கு பறந்தது. இந்த தொடரின் நீண்ட தூரம் ஓடிய சிக்சர் இது தான். அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 34 ரன்கள் கிடைத்தது.

202 ரன்கள் குவிப்பு

202 ரன்கள் குவிப்பு

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களைக் குவித்தது. சாம்பியன்ஸ் லீக்கில் சென்னை அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். டோணி 63 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் ஒரு பவுண்டரியும், 8 சிக்சரும் அடங்கும்.

பிரிக்க முடியாத ஷிகர் தவான் -பார்த்தீவ் பட்டேல்

பிரிக்க முடியாத ஷிகர் தவான் -பார்த்தீவ் பட்டேல்

பின்னர் கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கியது ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி. கேப்டன் ஷிகர்தவானும், பார்த்தீவ் பட்டேலும் அருமையான தொடக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்தது இந்த ஜோடி.

இலக்கை நெருங்கிய சன்ரைசர்ஸ்

இலக்கை நெருங்கிய சன்ரைசர்ஸ்

இதேபோல் டேரன் சேமியும் நன்றாக விளையாடினார். ஆனாலும் இலக்கை நெருங்க முடிந்ததே தவிர அதை தொட முடியவில்லை. ஹைதராபாத் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 190 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

2வது வெற்றி

2வது வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது 2-வது வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் டைட்டன்சை வென்றிருந்தது. தனது 3-வது ஆட்டத்தில் சென்னை அணி பிரிஸ்பேனுடன் நாளை மோதுகிறது.

டோணியின் மின்னல்வேக அரை சதம்

டோணியின் மின்னல்வேக அரை சதம்

இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 16 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இதன் மூலம் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் மின்னல் வேகத்தில் அரைசதம் அடித்தவர் என்ற சிறப்பை டோனி பெற்றார். இதற்கு முன்பு 2009-ம்ஆ ண்டு நியூ சவுத் வேல்சுக்கு எதிராக டிரினிடாட் அண்ட் டொபாக்கோ வீரர் கீரன் பொல்லார்ட் 18 பந்துகளில் அரைசதம் எடுத்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

19 பந்துகளில் 63 ரன்களை எடுத்த டோனியின் ஸ்டிரைக் ரேட் விகிதம் 331.51 ஆக இருந்தது. சாம்பியன்ஸ் லீக்கில் இதுவும் ஒரு சாதனை.

ரெய்னாவின் 500

ரெய்னாவின் 500

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா, சாம்பியன்ஸ் லீக்கில் 500 ரன்களை கடந்தார்.

Story first published: Friday, September 27, 2013, 9:58 [IST]
Other articles published on Sep 27, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+