For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாம்பியன்ஸ் லீக் டி20 தகுதி சுற்று! சதர்ன்-நார்தன், மும்பை-லாகூர் அணிகள் இன்று பலப்பரிட்சை!

By Veera Kumar

ராய்பூர்: சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டித் தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கின. ராய்பூரில் மாலை 4.00 மணிக்கு தொடங்கிய முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தின் நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியுடன் இலங்கையின் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணி மோதுகிறது.

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் 20 ஓவர் போட்டி மற்றும் ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெறும் உள்ளூர் டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் இன்று தொடங்கியது.

CLT20: Mumbai start qualifiers against Lions

16ம் தேதி வரை தகுதிச்சுற்று போட்டிகளும், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 4ம் தேதி வரை முக்கிய சுற்று போட்டிகளும் நடைபெற உள்ளன. முக்கிய சுற்றில் விளையாட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ள நிலையில், தகுதிச் சுற்றில் 4 அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியிலும் தலா 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். லாகூர் லயன்ஸ், மும்பை இந்தியன்ஸ், நார்தர் டிஸ்ட்ரிக்ட்ஸ், சதர்ன் எக்ஸ்பிரஸ் ஆகிய 4 அணிகள் தகுதிச் சுற்றில் களம் காண்கின்றன.

இதில் இருந்து 2 அணிகள் மட்டும் முக்கிய சுற்றுக்கு முன்னேறும். ஏ பிரிவில் ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், டால்பின்ஸ் மற்றும் தகுதிச் சுற்றில் இருந்து முன்னேறும் ஒரு அணி இடம் பெறும்.

பி பிரிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கேப் கோப்ராஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ், பார்படாஸ் டிரைடன்ட்ஸ் மற்றும் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி இடம் பெறும். லீக் ஆட்டங்களின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அரை இறுதி ஆட்டங்கள் அக்டோபர் 2ம் தேதி ஹைதராபாத்திலும், இறுதிப் போட்டி பெங்களூரில் அக்டோபர் 4ம் தேதியும் நடைபெற உள்ளது.

தகுதிச் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூர் நகரிலுள்ள மைதானத்தில் நடைபெறுகின்றன. இன்று மாலை 4.00 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் - சதர்ன் எக்ஸ்பிரஸ் அணிகள் மோதுகின்றன.

இதைத் தொடர்ந்து இரவு 8.00 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் லாகூர் லயன்ஸ் மோதுகிறது. போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

அணிகளின் விவரம்:

மும்பை இந்தியன்ஸ்: கெய்ரன் போலார்டு (கேப்டன்), ஹர்பஜன் சிங், அம்பத்தி ராயுடு, பிரக்யான் ஓஜா, பிரவீன் குமார், ஆதித்யா தாரே, ஜலஜ் சக்சேனா, ஜஸ்பிரீத் பூம்ரா, ஷ்ரேயாஸ் கோபால், மைக்கேல் ஹஸி, கோரி ஆண்டர்சன், லசித் மலிங்கா, மெர்சன்ட் டிலாங்கே, லெண்டில் சிம்மன்ஸ், சுஷாந்த் மராதே.

நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ்: ஈஷ் சோதி (கேப்டன்), ஜோனோ போல்ட், பிராட் வில்சன், கேன் வில்லியம்சன், டேனியல் பிளின், வாட்லிங், கிரீம் அல்ட்ரிட்ஜ், ஆன்டன் தேவ்சிச், டிம் சவுத்தீ, ஸ்காட் குக்கெலெஜின், டேரில் மிட்செல், டேனியல் ஹாரிஸ், ஸ்காட் ஸ்டைரிஸ், டிரென்ட் போல்ட், டேனியல் வெட்டோரி.

லாகூர் லயன்ஸ்: முகமது ஹபீஸ் (கேப்டன்), அகமது ஷஷாத், உமர் சித்திக் கான், உமர் அக்மல், நசீர் ஜம்ஷத், சல்மான் அலி, ஆசிப் ராஸா, முஷ்டாக் இக்பால், வகாப் ரியாஸ், இலியாஸ் சீமா, இம்ரான் அலி, சாத் நசீம், அட்னன் ரசூல், முகமது சயீத், அலி மன்சூர்.

சதர்ன் எக்ஸ்பிரஸ்: ஜனித் பெரேரா (கேப்டன்), தனுஷ்கா குணதிலகே, ஏஞ்சலோ பெரேரா, ஜெகன் முபாரக், நிரோஷன் டிக்வெல்லா, தில்ருவன் பெரேரா, பிரசன்னா சீகுகே, இஷான் ஜெயரத்னே, பர்வீஸ் மகரூப், கசுன் மதுஷங்கா, யசோதா லங்கா, சரித் ஜெயம்பாதி, சசித்ரா பதிரனா, சாண்டேகன் லக்ஷன்.

Story first published: Saturday, September 13, 2014, 16:28 [IST]
Other articles published on Sep 13, 2014
English summary
After a sumptuous feast of traditional cricket, it's time again to return to the shortest format as leading players, including India skipper Mahendra Singh Dhoni, get ready to represent their respective franchises in the sixth edition of the Champions League T20, with the qualifying round starting here on Saturday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+