சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனானார் ஷிகர் தவன்
பெங்களூர்: சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஷிகர் தவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறுகின்றன.
இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பங்கேற்கிறது. இந்த அணியின் கேப்டனாக தற்போது தவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சூப்பர்ப் பார்மில்...
ஷிகர் தவன் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். இந்திய அணிக்காக பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

கேப்டன் பரிசு
ஐபிஎல் போட்டிகளிலும் இவர் சிறப்பாக விளையாடினார். இதையடுத்து அவருக்கு தற்போது கேப்டன் பதவி பரிசாக கிடைத்துள்ளது.

3வது கேப்டன்
ஹைதராபாத் அணியின் 3வது கேப்டனாகிறார் தவன். இதற்கு முன்பு குமார சங்கக்கரா, கேமரூன் ஒயிட் ஆகியோர் கேப்டன்களாக இருந்துள்ளனர்.

சிங்கள அணியில் ஆடும் சங்கக்கரா
சங்கக்கரா இலங்கையைச் சேர்ந்த கண்டுதுரட்டா மரூன்ஸ் அணிக்காக ஆடப் போய் விட்டார். இதனால் தவனுக்கு கேப்டன் பதவி தரப்பட்டுள்ளது.

செப்டம்பர் 17 முதல்
செப்டம்பர் 17ம் தேதி குவாலிபயர் போட்டிகள் தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதான் அணி
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விவரம் - தவன், பார்த்திவ் படேல், கேமரூன் ஒயிட், ஜே.பி.டுமினி, டேல் ஸ்டெயின், டேரன் சமி, பிப்லாப் சமந்த்ராய், திசரா பெரைரா, கரன் சர்மா, ஹனுமா விஹாரி, ஆசிஷ் ரெட்டி, இஷாந்த் சர்மா, ஆனந்த் ராஜன்.


Click it and Unblock the Notifications