Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் லீக்: 5 ரன்கள் மட்டும் எடுத்த டெண்டுல்கர்! மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல் வெற்றி!

ஜெய்ப்பூர்: சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஏ பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, தென்னாப்ரிக்காவின் லயன்ஸ் அணியை எதிர் கொண்டது.

டாஸ் வென்ற மும்பை அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஆல்விரோ பீட்டர்ஸன் ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் 5 ரன்களில் ஆட்டமிழக்க, தினேஷ் கார்த்திக், ரோஹித் சர்மாவும் சீரான இடைவெளியில் வெளியேறினர்.

Mumbai Indians

19வது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது. 47 பந்துகளில் 63 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்மித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Story first published: Saturday, September 28, 2013, 10:00 [IST]
Other articles published on Sep 28, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+