யப்பா..! அந்த பையன்கிட்ட எல்லா திறமையும் இருக்கு.. இந்தியாவின் பலம்.. தாறுமாறாக பாராட்டும் கோச்
Recommended Video

மும்பை:பேட்டிங், பவுலிங் என எல்லாவற்றிலும் அணியின் மிக பெரிய பலம் விஜய் சங்கர் என்று பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் பாராட்டியுள்ளார்.
உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக, ஆ ஸ்திரேலிய தொடரை அனைத்து தரப்பினரும் உற்று நோக்கி வருகின்றனர். ஏன் என்றால் இந்த தொடர் தான் இந்திய அணிக்கு கடைசி சர்வதேச போட்டி.
அதற்கு பிறகு நேரிடையாக உலக கோப்பையில் நுழைய இருப்பதால் மனதளவி மிகுந்த நம்பிக்கையை இந்த தொடர் ஏற்படுத்தும். மேலும் இந்த தொடரின் வழியாக சில இளம் வீரர்களும் இந்திய அணியில் இடம்பெறலாம் என்பதால் மிகுந்த முக்கியமாக பார்க்கப்படுகிறது.
Also Read | 27, 49, 86.. கோல்னா இதுதான் கோல்.. யுவண்டசை சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு அழைத்து சென்ற ரொனால்டோ

பயிற்சியாளர் கருத்து
இந் நிலையில், இந்திய அணியின் தற்போதைய சூழல் குறித்து பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:

தவறு
இந்திய அணியில் விக்கெட் கீப்பிங்கில் தோனி உடன் இளம் வீரர் ரிஷப் பந்தை ஒப்பிடுவது தவறு. விக்கெட் கீப்பிங்கில் தோனி மற்ற வீரர்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார்.

முக்கிய வீரர்
இந்திய அணியில் அவர் மிகவும் முக்கிய வாய்ந்த வீரர். அதில் யாருக்கும் எப்போதுமே எந்த சந்தேகமும் வந்தது இல்லை.

முயற்சிகள்
உலக கோப்பை தொடருக்கு முன்னதாக, அணியில் ஒரு சில முயற்சிகளை மேற்கொள்வதற்காக நாங்கள் திட்டமிட்டோம். அதன்படி வீரர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிவு செய்தோம்.

மாற்றங்கள் இடம்பெறாது
ஆக அதற்கு தான்.. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சில மாற்றங்களை செய்தோம். இந்த திட்டங்கள் எல்லாம் நிச்சயம் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போது இடம்பெறாது.

சிறப்பான ஆட்டம்
பேட்டிங்கின் போது விஜய் சங்கர் வெவ்வேறு வரிசையில் களமிறங்கினாலும் சிறப்பாக விளையாடி உள்ளார். பந்துவீச்சிலும் அவர் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார்.

மிக பெரிய பலம்
இந்திய அணிக்கு விஜய் சங்கர் மிக பெரிய பலமாக அமைந்துள்ளார். அவர் முன்பைவிட இப்போது மிகுந்த நம்பிக்கையுடன் ஆடுகிறார்.

எந்த வரிசையிலும் சூப்பர்
எந்த வரிசையில் இறங்கினாலும் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். அவர் மிகுந்த நம்பிக்கையை பெற்றிருப்பது, அவரது பவுலிங்கிலும் பார்க்க முடிகிறது. பேட்டிங் , பவுலிங் என அனைத்து வகையிலும் அணியின் மிகபெரிய பலம் விஜய் சங்கர் என்று அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications