For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னங்க கொரோனாவும் ஐபிஎல் மாதிரியே போகுது.. கடைசில இவங்க 2 பேருக்கும் தான் பைனல் மேட்ச்சா?

சென்னை : ஐபிஎல் வந்தாலும் சரி, கொரோனா வைரஸ் வந்தாலும் சரி எப்போதும் தங்கள் வேலையே செவ்வனே செய்து வரும் மீம் கிரியேட்டர்கள் சமீபத்தில் ஐபிஎல்-லுடன் கொரோனா வைரஸ் சூழலை ஒப்பிட்டு சில தெறிக்க விடும் மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.

Recommended Video

Corona Cricket memes viral in social media.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதமாக இந்தியாவில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது.

அதனால், ஐபிஎல் தொடர் கூட நடக்கவில்லை. ஆனாலும், கிரிக்கெட் ரசிகர்கள் எப்படியோ ஐபிஎல்-ஐ வைத்து மீம் போட்டு விடுகிறார்கள். அவற்றில் சில

தோனி.. ஏன் இப்படி பண்றீங்க? தலையை சொறியும் பவுலர்கள்.. சைலன்ட்டாக காலி செய்யும் தல.. சிஎஸ்கே ரகசியம்தோனி.. ஏன் இப்படி பண்றீங்க? தலையை சொறியும் பவுலர்கள்.. சைலன்ட்டாக காலி செய்யும் தல.. சிஎஸ்கே ரகசியம்

ஐபிஎல் பைனல் போலவே..

ஐபிஎல் பைனல் போலவே..

"ஐபிஎல் தொடர் மாதிரியே கொரோனா வைரஸ் பாதிப்பும் இருக்கு. கடைசியில் மும்பை - சென்னை தான் இறுதிப் போட்டி போல. இங்கேயும் ஆர்சிபி டீமை காணோம் பாரேன்". கொரோனா வைரஸ் மும்பை மற்றும் சென்னையில் தான் அதிக அளவில் பரவி வருகிறது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சென்னையில் 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சென்னையில் தினமும் நூற்றுக் கணக்கில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மும்பை அளவுக்கு எண்ணிக்கை உயருமோ என்ற அச்சம் உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

அதை வைத்து தான் ஐபிஎல்-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இறுதிப் போட்டிகளில் அடிக்கடி மோதுவது போல, சென்னை - மும்பை இடையே தான் கொரோனாவிலும் போட்டி என கூறுகிறது அந்த மீம். இடையே பெங்களூரில் பாதிப்பு குறைவாக இருப்பதை சுட்டிக் காட்டி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல்-இல் பிளே-ஆஃப் கூட முன்னேறாத அணி என்பதை கிண்டல் செய்துள்ளனர்.

டெஸ்ட் மேட்ச் போல..

டெஸ்ட் மேட்ச் போல..

லாக்டவுனில் ஒவ்வொரு நாளும் டெஸ்ட் மேட்ச் போல மெதுவாக நகர்கிறதாம். ஆனால், இந்த வருடத்துக்கு பெயர் 20-20 என கிண்டல் செய்துள்ளது இந்த மீம். மின்னல் வேகத்தில் ரன் குவிக்கப்படும் டி20 போட்டிகளுடன், டெஸ்ட் போட்டியை ஒப்பிட்டு இப்படி ஒரு மீம்.

டிக்டாக் அலப்பறைகள்

டிக்டாக் அலப்பறைகள்

இந்த கொரோனா வைரஸ் லாக்டவுனில் கிரிக்கெட் வீரர்கள் என்ன செய்வது என தெரியாமல் டிக்டாக் செயலியில் கன்னாபின்னாவென வீடியோ போட்டு வியூஸை அள்ளி வருகிறார்கள். அதில் முதலில் இருப்பவர் டேவிட் வார்னர் தான். குடும்பத்தோடு இந்திய சினிமா பாடல்கள் மற்றும் சின்னப்புள்ளத்தனமான வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.

எத்தனை வியூஸ்?

எத்தனை வியூஸ்?

எனவே, லாக்டவுனுக்கு பின் கிரிக்கெட் போட்டிகள் துவங்கும் போது வீரர்களின் ஸ்கோர், விக்கெட் போன்ற செயல்பாடுகளை காட்டும் போது கூடவே டிக்டாக்கில் எத்தனை வீடியோ போட்டார், அதில் எத்தனை வியூஸ் கிடைத்தது என போட வேண்டிய நிலை வருமாம்.

8 மணிக்கு மேட்ச் இல்லையா?

8 மணிக்கு மேட்ச் இல்லையா?

ஐபிஎல் போட்டிகள் வழக்கமாக இரவு எட்டு மணிக்கு துவங்கும். இப்போது ஐபிஎல் நடக்கவில்லை. எட்டு மணிக்கு நாம் ஐபிஎல் போட்டிகளை கேட்டால், எட்டு மணிக்கு பிரதமர் வந்து பேசுகிறார் என கிரிக்கெட் ரசிகர்கள் வெறுத்துப் போய் இருக்கிறார்களாம்.

லாக்டவுன் கட்டுப்பாடு

லாக்டவுன் கட்டுப்பாடு

லாக்டவுன் நேரத்தில் வெளியே செல்லக் கூடாது. சமூக இடைவெளியை கடைபிடிக்க முடிந்த வரை வீட்டிலேயே இருப்பது நல்லது என கூறப்படும் நிலையில், பல கிரிக்கெட் ரசிகர்களை பழைய போட்டிகளின் ஒளிபரப்பு வீட்டில் நிறுத்தி வைத்துள்ளது. அதை சொல்கிறது இந்த மீம்.

Story first published: Thursday, May 14, 2020, 21:42 [IST]
Other articles published on May 14, 2020
English summary
Coronavirus Cricket memes trending viral in social media. Meme creators made fun of coronavirus with cricket.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X