சில போட்டிகள்ல வின் பண்ணிட்டா போதும்... அப்புறம் பாருங்க எங்களை மிஞ்ச முடியாது... உனாத்கட் உறுதி
டெல்லி : ஐபிஎல் 2021 தொடரின் நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன.
கடந்த 5 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், புள்ளிகள் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சமமாக உள்ளது.
இந்நிலையில் நாளைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதனிடையே, ராஜஸ்தான் அணியின் பௌலர் உனாத்கட் வெற்றிக்கான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

நடப்பு சாம்பியனுடன் சமம்
ஐபிஎல் 2021 தொடரில் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. கேகேஆர் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சமமாக புள்ளிகளை பெற்றுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

வெற்றிக்கான தீவிரம்
இந்நிலையில் டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி மோதவுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான கடந்த போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியை ராஜஸ்தான் அணி வெற்றி கொண்டுள்ளது. இந்நிலையில் நடப்பு சாம்பியனை நாளைய போட்டியில் அந்த அணி வெற்றி கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

நாளை டெல்லியில் போட்டி
இந்நிலையில் தொடர்ந்து மும்பையில் போட்டிகளை விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நாளைய தினம் முதல் முறையாக டெல்லியில் விளையாடவுள்ளது. இதனிடையே, அருண் ஜெட்லி மைதானம் சிறந்த பிட்சை கொண்டதாக இருக்கும் என்று ராஜஸ்தான் அணியின் பௌலர் ஜெய்தேவ் உனாத்கட் நம்பிக்கை தெரிவித்தள்ளார்.

வெற்றிகள் தேவை
தன்னுடைய அணிக்காக சிறப்பான போட்டிகளை அளித்துவரும் அவர், தான் தெளிவான மனநிலையுடன் இந்த சீசனை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய அணியின் ட்விட்டர் பக்கத்தில் பேசியுள்ள அவர், இன்னும் சில வெற்றிகள் அணிக்கு தேவை என்றும் அதை சாத்தியப்படுத்தினால் சிறப்பான தருணங்களை அணி சந்திக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிதுள்ளார்.


Click it and Unblock the Notifications