Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-ல் சம்பவம் இருக்கு.. சிபிஎல்-ல் மிரட்டல் சதம் கொடுத்த டூப்ளசிஸ்.. சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்!

வெஸ்ட் இண்டீஸ்: கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டூப்ளசிஸ் காட்டி வரும் ஆக்ரோஷ ஆட்டம், சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரை போன்று மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில் நேற்று 15ஆவது லீக் போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ், கிட்ஸ் அன்ட் நிவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

அதிரடி பேட்டிங்

அதிரடி பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய செயிண்ட் லூசியா அணியில் தொடக்கத்திலே 2 விக்கெட்கள் வீழ்ந்து தடுமாறியது. ஓப்பனிங் வீரர் ப்ளெட்சர் 23 ரன்களுக்கும் ஒன்டவுன் வீரர் கெரன் காட்டோய் 10 ரன்களுக்கு வெளியேறினர். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த டூப்ளஸிஸ் - ராஸ்டன் சேஸ் ஜோடி எதிரணி பந்துவீச்சை சிதறடித்தனர்.

அசுர சதம்

அசுர சதம்

குறிப்பாக ஒவ்வொரு பந்தையும் சளைக்காமல் அடித்து நொறுக்கிய டூப்ளசிஸ் சதம் விளாசி அசத்தினார். 60 பந்துகளை சந்தித்த அவர் 13 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 120 ரன்கள் குவித்தார். இதே போல ராஸ்டன் சேஸும் 64 ரன்களை குவித்தார். இதனால் 20 ஓவர்களில் லூசியாஸ் அணி 224 ரன்களை குவித்தது.

ஐபிஎல்

ஐபிஎல்

இதனிடையே டூப்ளஸின் ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஐபிஎல் தொடரின் 2வது பாதி ஆட்டங்கள் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இதில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்காக டூப்ளசிஸ் விளையாடி வருகிறார்.

சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்

சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்

சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக டூப்ளசிஸ் இருந்து வருகிறார்.

தொடக்க வீரராகவும், சில சமயங்களில் ஒன் டவுன் வீரராகவும் களமிறங்கும் டூப்ளஸ்சிஸ் தற்போது கரீபியன் ப்ரீமியர் லீக்கில் சதமடித்து அசுரத்தனமான ஃபார்மில் உள்ளதால் ஐபிஎல் தொடரிலும் மிரட்டுவார் என ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.

Story first published: Sunday, September 5, 2021, 12:26 [IST]
Other articles published on Sep 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+