Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சேல்ஸ் மேன்களாக மாறும் கிரிக்கெட் ஜாம்பவான்கள்.. ஸ்டார் நிறுவனத்துக்கு ரசிகர்கள் எதிர்ப்பு

மும்பை: ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் ஸ்டார் நிறுவனத்தால் சேல்ஸ் மேன்களாக மாறிவிட்டதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Recommended Video

IPL 2022: Salesmenஆக மாறும் Commentators! Star Sportsக்கு எதிர்ப்பு | OneIndia Tamil

ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் ஸ்டார் நிறுவனம் பெரும் தொகையை பிசிசிஐயிடம் கொடுத்து ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

முதலீடு செய்த தொகையை திரும்ப பெற வேண்டும் என்றால், அதற்கு பந்துவீசும் முதல் நொடி வரை விளம்பரம் போட்டால் தான் முடியும்.

அபத்தம்

அபத்தம்

ஆனால் லாபம் ஈட்ட வேண்டும் என்றால் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போதே விளம்பரத்தை போட்டால் தான் முடியும். அதற்காக ஸ்டார் நிறுவனம் பல்வேறு விளம்பர யுத்தியை பயன்படுத்தி வருகிறது. பவர்பிளே நடைபெறும் போது அதனை ஒரு பொருளோடு விளம்பரப்படுத்துவது. பின்னர் தமன்னா கூறுவது போல் இது வாங்கினால் இது ஃபிரி என்று கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபடும் ஜாம்பவான்களையே பேச வைத்தது தான் அபத்தம்.

சேல்ஸ் மேன்கள்

சேல்ஸ் மேன்கள்

ஒரு காலத்தில் பலரும் ஆங்கிலம் கற்றதும், கிரிக்கெட் உள்ள நுணக்கங்களை கற்றதும் இந்த கிரிக்கெட் வர்ணனையை பார்த்து தான். ரிச்சி பெனார்ட் முதல் ஹர்சா போக்லே வரை அவர்கள் பேசும் வர்ணனைக்காக கிரிக்கெட் பார்த்த காலம் போய், தற்போது உள்ளவர்கள் சேல்ஸ் மேன்களாகவே மாறி வருகின்றனர்.

பழைய வர்ணனை

பழைய வர்ணனை

ஒரு பவுண்டரி அடித்தால், அந்த வீரர் அதனை எப்படி அடித்தார், பந்துவீச்சாளர் என்ன தவறு செய்தார் என்பதை தானே முன்பு உள்ள கிரிக்கெட் வர்ணனையாளர் சொல்வார்கள், இப்போது எதாவது ஒரு நிறுவன பெயரை குறிப்பிட்டு, பவுண்டரி என்று சொல்வதற்குள் அடுத்த பால் வந்துவிடுகிறது.

கொஞ்சம் கிரிக்கெட்

கொஞ்சம் கிரிக்கெட்

இந்த விளம்பரங்களை தவிர்த்து கொஞ்சம் தான் கிரிக்கெட் பற்றியே வர்ணனையாளர்கள் பேசுகின்றனர். இது எல்லாம் ஆங்கிலம் வர்ணனை மட்டும் தான். தமிழ் இதைவிட மோசம். சொந்த கதை, சோக கதை, அரட்டை, விளம்பரத்துக்கு நடுவே கொஞ்சம் கிரிக்கெட். ஒரு சிலர் காமெடி என்ற பெயரில் ரசிகர்களை வெறுப்ப இந்த நடைமுறை இனிமேலாவது மாறுமா என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Story first published: Saturday, May 7, 2022, 19:04 [IST]
Other articles published on May 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+