Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்களுக்கு ஷாக்.. ஸ்காட்லாந்திடம் தோற்ற வெஸ்ட் இண்டீஸ்.. எப்படி நடந்தது இந்த ஆச்சரியம்.. விவரம்!

ஹோபர்ட்: டி20 உலகக்கோப்பையில் கத்துக்குட்டி அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மிக மோசமான தோல்வியை தழுவியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது முதல் சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் இன்று நடைபெற்ற குரூப் பி பிரிவு போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பொளந்துக்கட்டிய ஸ்காட்லாந்து

பொளந்துக்கட்டிய ஸ்காட்லாந்து

வெஸ்ட் இண்டீஸ் சுலபமாக வென்றுவிடும் என எதிர்பார்த்த நிலையில் ஸ்காட்லாந்து ஆட்டம் காட்டியது. அந்த அணியின் பவுலிங்கை ஸ்காட்லாந்து பேட்டர்கள் அடுத்தடுத்து பவுண்டரிக்கு பறக்கவிட்டனர். ஓப்பனிங் வீரர் முன்சே 53 பந்துகளில் 66 ரன்களை குவித்து நல்ல அடித்தளம் அமைக்க, கடைசி நேரத்தில் மாக்லியோட் 23 ரன்களை விளாசினார். இதனால் 20 ஓவர்களில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்களை குவித்தது.

சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ்

சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ்

இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் கெயில் மேயர்ஸ் 20 ரன்களுக்கும், எவின் லீவிஸ் 14 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மிடில் ஆர்டர் வீரர்கள் இதனை விட மோசமாக சொதப்பினர் பிரண்டன் கிங் (17), நிகோலஸ் பூரண் (4), ஷமார் ப்ரூக்ஸ் (4), ரோவ்மன் போவெல் (5) என சொற்ப ரன்களுக்கு மோசமாக வெளியேறினர்.

ஹோல்டரின் போராட்டம்

ஹோல்டரின் போராட்டம்

தனி ஆளாக போராடிய ஜேசன் ஹோல்டருக்கு பார்ட்னர்ஷிப் அமைக்கக்கூட ஒரு வீரரும் இல்லை. ஆனால் அவரும் 33 பந்துகளை சந்தித்து 38 ரன்களை விளாசி அவுட்டானார். மற்ற வீரர்கள் 5 ரன்களை கூட எடுக்காமல் வெளியேற 118 ரன்களுக்கெல்லாம் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து மோசமான தோல்வியை பெற்றது.

இலங்கையின் நிலைமை

இலங்கையின் நிலைமை

வெஸ்ட் இண்டீஸ் போன்ற பலமான அணியை கத்துக்குட்டியான ஸ்காட்லாந்து வீழ்த்தியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இதே போல இலங்கை அணியும் நமீபியாவிடம் மிகவும் மோசமான முறையில் தோல்வியடைந்தது. இதனால் இந்த டி20 உலகக்கோப்பையில் என்ன நடக்கிறது என்பது புரியாமல் ரசிகர்கல் ஆச்சரியத்தில் உள்ளனர்.

Story first published: Monday, October 17, 2022, 18:26 [IST]
Other articles published on Oct 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+