Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்போவே மும்பைக்கு ஆதரவா??.. ரோகித்துக்கு சாதகமாக நடந்த நிதின் மேனன்.. வச்சு செய்யும் ரசிகர்கள்!

இந்தூர்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியின் போது ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக நிதின் மேனன் முடிவு எடுத்த நிலையில் விராட் கோலி ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்துள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள், பேட்டிங்கிற்கு உதவியாக பிட்ச் இருக்கும் என நினைத்த சூழலில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 100 ரன்களை கூட அடிக்க முடியாமல் தடுமாறினர்.

இந்திய அணி சரிவு

இந்திய அணி சரிவு

ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா 12 ரன்களுக்கும், சுப்மன் கில் 21 ரன்களுக்கும் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். இதன் பின்னர் வந்த சட்டீஸ்வர் புஜாரா 1 ரன்னுக்கும், ஜடேஜா 4 ரன்களையும் மட்டுமே எடுத்தனர். நாதன் லியோன் பந்துவீச்சில் சிக்கி அனைத்து வீரர்களும் வெளியேற விராட் கோலி மட்டும் தனியாளாக போராடினார். ஆனால் அவராலும் 22 ரன்களுக்கு மேல் அடிக்க முடியவில்லை. இதனால் 88 ரன்களுக்கெல்லாம் 8 விக்கெட்களை இழந்து திணறுகிறது.

மீண்டும் சர்ச்சை

மீண்டும் சர்ச்சை

இந்நிலையில் இந்த போட்டியின் போது அம்பயர் நிதின் மேனன் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஸ்டார்க்கிடம் சிக்கி ரோகித் சர்மா அவுட்டாகியிருக்க வேண்டும். குட் லெந்தில் போடப்பட்ட அந்த பந்தை ரோகித் அடிக்க முயன்ற போது எட்ஜாகி கேட்ச் ஆனது. இதற்கு அவர்களும் அவுட் கேட்க அம்பயர் நிதின் மேனன் இல்லை என்று தவிர்த்தார். தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாத ஆஸ்திரேலிய வீரர்கள் டிஆர்எஸ் எடுக்க தவறினர். இறுதியில் ரோகித் அவுட்டானது தெரியவந்தது.

2வது முறையாக தவறு

2வது முறையாக தவறு

அதே ஓவரின் 4வது பந்திலும் ரோகித் அவுட்டாகியிருக்க வேண்டும். இன் ஸ்விங்காகி வந்த பந்தை ரோகித் தவறவிட எல்.பி.டபள்யூ ஆனார். இதற்கும் அவுட் என அப்பீல் கேட்க நிதின் மேனன் மறுத்துவிட்டார். இந்த முறையும் நீண்ட ஆலோசனை செய்த ஆஸ்திரேலிய வீரர்கள், ரிவ்யூவ் கேட்கவில்லை. இறுதியில் எல்.பி.டபள்யூ ஆகியுள்ளார் எனத்தெரியவந்தது.

கொந்தளிக்கும் கோலி ரசிகர்கள்

கொந்தளிக்கும் கோலி ரசிகர்கள்

ஏற்கனவே நிதின் மேனன் தொடர்ந்து தவறான முடிவுகளை வழங்கி வருகிறார் என குற்றச்சாட்டுக்கள் உள்ளன. சமீபத்தில் விராட் கோலியின் பேட்டிலும், பேடிலும் ஒரே நேரத்தில் பந்து பட்ட போது நிதின் மேனன் அவுட் எனக்கொடுத்தது சர்ச்சையானது. இதனால் கோலி என்றால் வேண்டுமென்றே அவுட் கொடுப்பது, ரோகித் சர்மா என்றால் அவுட்டானாலும், நாட் அவுட் கொடுப்பது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Wednesday, March 1, 2023, 13:24 [IST]
Other articles published on Mar 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+