Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை படத்தில் எந்த தமிழ் நடிகர்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும்?

சென்னை: நம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக சினிமாவும் கிரிக்கெட்டும் விளங்குகிறது. சினிமா நட்சத்திரங்களையும் கிரிக்கெட் வீரர்களையும் நம் நாட்டு ரசிகர்கள் பெருமளவு பின் தொடர்கின்றனர்.இந்த நிலையில் பல கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு கஷ்டங்கள், கடின உழைப்புகளை தாண்டி தான் தற்போது பிரபலங்களாக மாறி இருக்கிறார்கள்.

அந்த வகையில் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பது என்பது அண்மைக்காலமாக நிகழ்ந்து வருகிறது.எம் எஸ் தோனி என்ற திரைப்படம் இதற்கு ஒரு மிகப்பெரிய உதாரணமாகும். அதனைத் தொடர்ந்து சச்சின், கபில் தேவ் உள்ளிட்டோரின் வாழ்க்கை திரைப்படங்களாக வெளியாகி வெற்றியை கண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது இருக்கும் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்தால், எந்த தமிழ் நடிகர் அதற்கு சரியாக இருப்பார் என்பதை தற்போது பார்க்கலாம்.

Rohit Actor Shiva

இந்த வரிசையில் முதலிடத்தில் ரோகித் சர்மா இருக்கின்றார். ரோகித் சர்மா இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக விளங்கி வருகிறார். ஆனால் இந்த இடத்திற்கு வர அவர் பல்வேறு கஷ்டங்களை சந்தித்து இருக்கின்றார். சிறுவயதிலேயே பெற்றோரை விட்டு பாட்டியுடன் வாழ்ந்து வந்த ரோகித் சர்மா மும்பையில் தங்கி கிரிக்கெட் பயின்று இன்று உச்சப் புகழை பெற்று இருக்கிறார்.

இந்த தருணத்தில் ரோகித் சர்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்றால் அதற்கு நடிகர் சிவா தான் சரியாக இருப்பார். அகில உலக சூப்பர் ஸ்டார் என்று சிவாவை அழைக்கும் ரசிகர்கள் எப்போதும் அவரை ரோகித் சர்மாவுடன் தான் ஒப்பிடுவார்கள். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ஹர்திக் பாண்டியா.

Dhanush Hardik

ஹர்திக் பாண்டியா கிரிக்கெட் வாழ்க்கை என்பது ஊக்கத்தை கொடுக்கும் அளவுக்கு இருக்கும். மேகி மட்டும் உணவாக சாப்பிட்டுக் கொண்டு வெறும் ₹200 ஊதியத்தில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய ஹர்திக் பாண்டியா தற்போது உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களின் வரிசையில் இருக்கின்றார். இவருடைய கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடித்தால் சிறப்பாக இருக்கும். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் யுவராஜ் சிங்.

யுவராஜ் சிங் முன்னாள் கிரிக்கெட் வீரர் யோக்ராஜ் குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும், அவரும் தனது வாழ்க்கையில் பல சரிவுகளை சந்தித்து இருக்கிறார். குறிப்பாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து, மீண்டு இந்திய அணியில் வெற்றிகரமாக இடம் பிடித்தார்.

Yuvraj Ravi Mohan

அவருடைய வாழ்க்கை வரலாற்றை சினிமா படமாக எடுக்க வேண்டும் என்றால் நடிகர் ரவி மோகன் அதற்கு சிறப்பான தேர்வாக இருப்பார்.இதேபோன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கிங் விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை என்பது பல இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக விளங்கும். அவருடைய திரைப்பட வாழ்க்கைக்கு சின்ன வயசு சிம்பு சரியான தேர்வாக இருப்பார்.

Story first published: Wednesday, August 27, 2025, 17:34 [IST]
Other articles published on Aug 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+