Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 100, 200, 300,400 ரன்கள் அடித்த வீரர்கள் யார் தெரியுமா?

மெல்போர்ன் : 1877 ஆம் ஆண்டு கிரிக்கெட் டெஸ்ட் சரித்திரத்தின் துவக்க ஆட்டத்தில் இருந்து பல ரெக்கார்டுகள் ஏற்படுத்தப்பட்ட வண்ணம் இருக்கின்றன.அவற்றின் நான்கு வகை சரித்திரம் படைத்த சதங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

ind vs aus rohit sharma india vs australia gabba test

1. முதல் சதம்.

மார்ச், 1877.
மெல்போர்ன் டெஸ்ட்

ஆஸ்திரேலிய துவக்க வீரர் சார்லஸ் பானார்மன் டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தின் முதல் சதம் அடித்து சரித்திரம் படைத்தார்.இவர் தான் டெஸ் ட் கிரிக்கெட் சரித்திரத்தின் முதல் (துவக்க ) பந்தை எதிர் கொண்டு விளையாடியவர்.இது தான் அறிமுக வீரரால் எடுக்கப் பட்ட துவக்க ஆட்டத்தின் முதல் சதம் ஆகும்.

சார்லஸ் பானார்மன் எடுத்த ரன்கள் 165.இவர் எடுத்த பவுண்டரிகள் எண்ணிக்கை 18.இவரது அணியில் இந்த
இன்னிங்சின் அடுத்து எடுக்கப் பட்ட வீரரின் அதிக பட்ச ரன்கள் 18.
இந்த டெஸ்டில் இவருக்கு அடுத்து எடுத்த அதிக பட்ச ரன்கள்
இங்கிலாந்து துவக்க வீரர் ஹாரி ஜீப். 63 ரன்கள்.

சார்லஸ் பானார்மன் அவுட் ஆகவில்லை. ரிடையர்ட் ஹர்ட் மூலம் வெளியேறினார்,இவர் அம்பயராகவும் சில டெஸ்டுகளில் பணி புரிந்துள்ளார்.
டெஸ்ட் சரித்திரத்தின் முதல் டெஸ்டை ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது

2.. முதல் இரட்டை சதம்.

.டிசம்பர், 1894.
சிட்னி டெஸ்ட்.

ஆஸ்திரேலிய வீரர் சிட்னி கிரேகாரி எட்வர்ட் கிரிக்கெட் டெஸ்ட் சரித்திரத்தின் முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்தார்.இவர் 28 பவுண்டரிகள் உதவியுடன் எடுத்த ரன்கள் 201. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் எடுத்த ரன்கள் 586.
முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி பாலோவ் ஆன் பெற்று தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியது.

ஆஸ்திரேலிய வீரர் சிட்னி கிரேகாரி எட்வர்ட் இரட்டை சதம் எடுத்தும், பாலோ ஆன் பெற்றும் இங்கிலாந்து அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிட்னி கிரேகாரி எட்வர்ட் பிறந்த இடத்தில் பிற்காலத்தில் சிட்னி கிரிக்கெட் மைதனம் உருவாக்கப் பட்டது.இவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ஏற்கும் பொழுது வயது 42 வருடங்கள் 43 நாட்கள்.
இந்த இரட்டை சதத்தை சேர்த்து இவர் எடுத்த டெஸ்ட் சதங்கள் 4.

3.. முதல் முச்சதம்.

. ஏப்ரல், 1930
கிங்ஸ்டன் டெஸ்ட்.

டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் முதல் முச்சதம் பதிவு செய்த பெருமை பெற்றவர் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஆண்டி சாந்தம்.
இவர் எடுத்த ரன்கள் 325.எதிர் கொண்ட பந்துக்கள் 640. பவுண்டரிகள் 28.
இந்த டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது.

. இந்த டெஸ்டில் முச்சதம் (ஆண்டி
சாந்தம் 325 ) இரட்டை சதம்( ஜார்ஜ் ஹெட்லி 223 ) மற்றும் சதம் (லெஸ் ஆம்ஸ் 149 ) ஆகிய மூன்று விதங்களான சதங்களையும் கண்டது.ஆண்டி சாந்தமின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை இந்த கிங்ஸ்டன் டெஸ்ட்டுட்டுடன் முடிவிற்கு
வந்தது.ஆம் இதுதான் இவர் ஆடிய கடைசி டெஸ்ட் மேட்ச்.

4.. முதல் நான்கு சதம்.

ஏப்ரல், 2004.
செயிண்ட் ஜான்ஸ் டெஸ்ட்

மேற்கு இந்திய தீவுக்கள் அணி கேப்டன் பிரைன் லாரா டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தின் முதல் தனி நபரின் 400 ரன்கள்* பதிவு செய்தார்.எதிர் கொண்ட பந்துக்கள் 582.43 பவுண்டரிகள். 4 சிக்ஸர்கள்.டெஸ்ட் ட்ராவில் முடிந்தது.
மற்ற 3 சதங்கள். ரிட்லே ஜேக்கப்ஸ் 107* , அன்றேவ் பிளீண்டப் 102* கேப்டன் மைகேல் வாகன் 140. பிரைன் லாரா பல ரிகார்டுகள் ஏற்படுத்தி சாதித்துள்ளார்.ஒரே இன்னிங்சில் 400* இது வரையில் எடுத்த ஒரே வீரர் இவர் மட்டும் தான்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Wednesday, December 18, 2024, 18:39 [IST]
Other articles published on Dec 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+