டுவென்டி 20 உலகக் கோப்பை போட்டி இன்று தொடக்கம் – நாளை ஆப்கனுடன் இந்தியா மோதல்

ஐபிஎல் தொடர் அணல் பறக்க முடிந்துள்ள நிலையில் அடுத்த கிரிக்கெட் விருந்து இன்று ஆரம்பமாகிறது. உலகக் கோப்பை டுவென்டி 20 போட்டித் தொடர் இன்று மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்குகிறது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய 12 அணிகள் இதில் கலந்து கொள்கின்றன.
தலா 3 அணிகளைக் கொண்ட நான்கு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சி அணியில் இந்தியா இடம் பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் ஆப்கானிஸ்தானும், தென் ஆப்பிரிக்காவும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இடம் பெற்றுள்ள அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதன் பின்னர் நான்கு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும்.
அதில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும். முதல் அரை இறுதிப் போட்டி மே 13ம் தேதி நடைபெறும். 2வது அரை இறுதிப் போட்டி மே 14ம்தேதி நடைபெறும். இறுதிப் போட்டி பார்படாஸில், மே 16ம் தேதி நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் முதல் போட்டியில், நியூசிலாந்தும், இலங்கையும் மோதுகின்றன. கயானாவில் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
2வது போட்டி இரவு 2.30 மணிக்கு மேற்கு இந்தியத் தீவுகள், அயர்லாந்துக்கு இடையே நடைபெறுகிறது.
நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது.
இதுவரை நடந்துள்ள 2 உலகக் கோப்பைப் போட்டிகளில் முதல் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. 2வது தொடரில் பாகிஸ்தான் சாம்பியன் ஆனது.
அணிகள் விவரம்
ஏ பிரிவு
பாகிஸ்தான், வங்காளதேசம், ஆஸ்திரேலியா
பி பிரிவு
இலங்கை, நியூசிலாந்து, ஜிம்பாப்வே
சி பிரிவு
தென்ஆப்பிரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான்
டி பிரிவு
மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து, அயர்லாந்து
போட்டிகள் விவரம்
ஏப்.30: நியூசிலாந்து - இலங்கை - இரவு மணி 10.30 மணி, கயானா
ஏப்.30: மே.இ. தீவுகள்- அயர்லாந்து, நள்ளிரவு 2.30 மணி, கயானா
மே 1: ஆப்கானிஸ்தான் -இந்தியா, இரவு 7 மணி, செயின்ட் லூசியா
மே 1: வங்காளதேசம் - பாகிஸ்தான், இரவு 11 மணி, செயின்ட் லூசியா
மே 2: இந்தியா - தென்ஆப்பிரிக்கா, இரவு 7 மணி, கயானா
மே 2: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான், இரவு 11 மணி, கயானா
மே 3: இலங்கை - ஜிம்பாப்வே, இரவு 7 மணி, கயானா
மே 3: வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து, இரவு 11 மணி, கயானா
மே 4: நியூசிலாந்து - ஜிம்பாப்வே, இரவு 7 மணி, கயானா
மே 4: இங்கிலாந்து -அயர்லாந்து, இரவு 11 மணி, கயானா
மே 5: ஆஸ்திரேலியா - வங்காளதேசம், இரவு 7 மணி, பார்படோஸ்
மே 5: ஆப்கானிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா, இரவு 11 மணி, பார்படோஸ்
சூப்பர் 8
மே 6: ஏ1- டி2, இரவு 7 மணி, பார்படோஸ்
மே 6: சி1- பி2, இரவு 11 மணி, பார்படோஸ்
மே 7: ஏ2 -சி2 இரவு 7 மணி, பார்படோஸ்
மே 7: பி1- டி1 இரவு 11 மணி, பார்படோஸ்
மே 8: சி1- டி2 இரவு 7 மணி, பார்படோஸ்
மே 8: ஏ1 0 பி2 இரவு 11 மணி, பார்படோஸ்
மே 9: சி2 - டி1 இரவு 7 மணி, பார்படோஸ்
மே 9: பி1- ஏ2 இரவு 11 மணி, பார்படோஸ்
மே 10: ஏ1 - சி1 இரவு 7 மணி, செயின்ட் லூசியா
மே 10: பி2 - டி2 இரவு 11 மணி, செயின்ட் லூசியா
மே 11: பி1 - சி2 இரவு 10.30 மணி, செயின்ட் லூசியா
மே 11: டி1 - ஏ2 நள்ளிரவு 2.30 மணி, செயின்ட் லூசியா
மே 13: முதல் அரை இறுதி, இரவு 9 மணி, செயின்ட் லூசியா
மே 14: இரண்டாவது அரை இறுதி, இரவு 9 மணி, செயின்ட் லூசியா
மே 16: இறுதிப்போட்டி, இரவு 9 மணி, பார்படோஸ்
Story first published: Wednesday, December 7, 2011, 18:37 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications