Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சனிக்கிழமை மட்டும் நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடிய 13 வயது சிறுவன்.. கிரிக்கெட்டின் அரிய தகவல்

மும்பை : முன்னாள் மேற்கு இந்திய தீவுக்கள் அணி கேப்டனாக இருந்த பிரேங்க் ஒர்ரேல் 13 வயதில் முதல் தர கிரிக்கெட் ஆடினார். அவருக்கு அத்த கால கட்டத்திய சில டெஸ்ட் ஆடும் வீரர்களுடன் விளையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது.ஒர்ரேல் மூன்று நாட்கள் கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கு கொண்டவர். மூன்று தினங்கள் தொடர்ந்தார் போல் அல்லாமல் , தொடர்ந்தார் போல் மூன்று சனிக்கிழமைகளில் மட்டும் ஆடப்பட்ட மேட்ச்சுக்கள் ஆகும்.

இவரது முழு பெயர் பிரேங்க் மக்லீன் மோர்ட்டிமர்
ஒர்ரேல் ஆகும்.1943- 44 ல் பார்ப்படாஸ் அணிக்காக இவர் ஜான் கோடார்ட்வுடன் சேர்ந்து எடுத்த ரன்கள் 502 ட்ரினிடாட் அணிக்கு எதிராக. ஒர்ரேல் 308*, கோடார்ட் 218*
அவருடைய இந்த சாதனையை அவரே முறியடித்தார் 1946- 47 சீசனில்.

virat kohli rohit sharma cricket history sports news

இந்த முறை ஒர்ரேல் ஜோடி சேர்ந்தது கிளைதே வால்காட்டுடன். இருவரும் சேர்ந்து அதே 4 வது விக்கெடுக்காகஎடுத்த ரன்கள் 574. வால்காட் 314*, ஒர்ரேல் 255 *. இந்த இருவரும் ஜோடி சேர்ந்து விளையாடியது பார்ப்படாஸ் அணிக்காக
ட்ரினிடாட் அணிக்கு எதிராக.

oooooooooooooooooooooooooooooooooooooooooo

டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டில் இங்கிலாந்து அணி ஸ்பின் பவுலர் செய்த சாதனையை, இரண்டு இந்திய ஸ்பின் பவுலர்கள் தனி தனியாக சமன் செய்துள்ளனர்.1956 ல் மான்செஸ்டர் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து ஸ்பின் பவுலர் ஜிம் லேக்கர் மொத்தம் 19
விக்கெடுக்கள் வீழ்த்தி சாதித்தார்.

அப்படி அவர் சாதிக்கும் பொழுது ஆஸ்திரேலிய அணியின் 11 வீரர்கள் விக்கெட்டுக்களையும் வீழ்த்திய முதல் வீரர் ஆனார்.1965 ல் இந்திய ஸ்பின் பவுலர் Venkataragavan இந்த சாதனைையை சமன் செய்தார். நியூசிலாந்து அணிக்கு எதிராக இவர் மொத்தம் 12 விக்கெட்டுக்கள் எடுக்கும் நேரத்தில், நியூஜிலாந்து அணியின் 11 வீரர்களின் விக்கெட்டுக்களையும்
வீழ்த்திய இரண்டாவது வீரர் ஆவார்.

இந்த மாதிரி சாதனையை செய்தவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் இவர்கள் இருவர் மட்டுமே.ஜிம் லேக்கர் அந்த 1956ல் மான்செஸ்டர் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்க்சில் 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி சாதித்தார்.அதை சமன் செய்த இந்திய ஸ்பின் பவுலர் அனில் கும்ப்ளே ஆவார்.இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1999ல் டெல்லி டெஸ்டில் ஒரு இன்னிங்க்சில் 10 விக்கெட்டுக்கள் எடுத்து சாதித்துள்ளார்.

oooooooooooooooooooooooooooooooooooooooooo

ஸ்ரீ லங்கா ஸ்பின் பவுலர் முத்தையா முரளீதாரன் தனது கடைசி டெஸ்டில் வீசிய கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தினார். அந்த விக்கெட் அவர் கிரிக்கெட் டெஸ்ட் சரித்திரத்தில் 800 விக்கெட்டுக்கள் எடுக்க உதவி உலக ரிகார்டு உண்டு செய்ய காரணமாக அமைந்தது.2010 ல் கால்லே டெஸ்டில் இந்திய வீரர் பிராகியான் ஓஜ்ஹா விக்கெட்டை முரளீதாரன்
வீழ்த்தினார்.

இவருக்கு முன்பு கடைசி டெஸ்டில் வீசிய கடைசி பந்தில் விக்கெட் எடுத்து சாதித்த வீரர் ஆஸ்திரேலிய அணியின் வேக பந்து பவுலர் மற்றும்
ஆல்ரவுண்டராக இருந்த ஆலன் டேவிட்சன் ஆவார். இவர் 1963 சிட்னி டெஸ்டில் ஓய்வு பெற்றார். இவர் வீசிய கடைசி பந்துக்கு அவுட் ஆனவர் இங்கிலாந்து அணியின் அலன் ஸ்மித். கேட்ச் பிடித்தது பாப் சிம்ப்சன்.ஆலன் டேவிட்சன் முதல் டை ( Tie test ) டெஸ்டில் (1960 ல் ) பேட்டிங், பவுலிங் இரண்டிலும் மிக முக்கிய பங்கு வகித்தார்.

ஆலன் டேவிட்சன் கடைசி டெஸ்ட் சிட்னி 1963 மற்றும் ஒரு புகழ் பெற்ற வீரர் நீல் ஹார்வேக்கும் கடைசி டெஸ்டாக அமைந்தது.இந்த இருவரின் ஆஸ்திரேலிய அணிக்கான பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக இவர்கள் கடைசி டெஸ்டில் இருவரையும் தலைமை தாங்கி ஆஸ்திரேலிய அணியை வழி நடத்த வைத்தார் அந்த அணியின் கேப்டன் ரிச்சி பெனோ.நீல் ஹார்வே 1948 ல் இந்திய அணிக்கு எதிராக அறிமுக டெஸ்ட் ஆடினார்.பிறகு டான் ப்ராட்மன் தலைமையில் 1948 ல் இங்கிலாந்துக்கு சென்ற புகழ் பெற்ற அணியில் இடம் பிடித்தவர். இப்பொழுது இவரது வயது 96.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Wednesday, January 15, 2025, 20:12 [IST]
Other articles published on Jan 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+