Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

29250 ரன்கள்! 86 சதம்! காலம் மறந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்.. இந்தியாவில் பிறந்து இங்கி. விளையாடிய வீரர்

மும்பை : 1961ஆம் ஆண்டு 4 வது டெஸ்ட் அந்த தொடரில். அடிலெய்ட் மைதானம். டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் பிரேங்க் ஒர்ரெல் முதலில் பேட்டிங் ஆட தீர்மானித்தார்.முதல் விக்கெட் விழுந்ததும் களம் இறங்கிய வீரர் ரோகன் கன்ஹாய். அப்பொழுது ஸ்கோர் 12 - 1.

இவர் நான்காவதாக அவுட் ஆகும் பொழுது மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஸ்கோர் 198 - 4. ரோகன் கன்ஹாய் எடுத்த ரன்கள் 117.
ஆஸ்திரேலிய வீரர் பாப் சிம்ப்சன் கேட்ச் பிடித்தார். பந்து வீசியது ரிச்சி பெனோ.கன்ஹாய் 14 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்தார்.

cricket cricket history west indies england

மேற்கு இந்திய தீவுகள் அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்.
முதல் விக்கெட் அவுட். ஸ்கோர் 66 - 1. ரோகன் கன்ஹாய் பேட்டிங் ஆட மைதானத்திற்குள் வந்தார்.அவர் அட்டகாசமாக ஆடினார். 12 பந்துக்களை பவுண்டரி எல்லைக் கோட்டை தாண்டி செலுத்தினார். அவர் அவுட் ஆகும் பொழுது அணியின் ஸ்கோர் 263 - 3.

கன்ஹாய்யின் தனிப்பட்ட ஸ்கோர் 115. இந்த இன்னிங்சிலும் இவரது விக்கெட்டை வீழ்த்தியவர் ரிச்சி பெனோ தான்.ஆம். ரோகன் கன்ஹாய் இந்த டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அட்டகாச ஆட்டத்தை வெளிப் படுத்தி சதங்கள் எடுத்து அசத்தினார்.
டெஸ்ட் டிராவில் முடிந்தது.ரோகன் கன்ஹாய் 79 டெஸ்ட்டுகள். 6227 ரன்கள். சராசரி 47.53. சதங்கள் 15. அரை சதங்கள் 28. பிடித்த கேட்சுகள் 50.

அதிக பட்ச ரன்கள் 256. அன்றைய கல்கத்தாவின் ஈடன் மைதானத்தில்.
அடுத்த 4 வது அன்றைய மெட்ராஸ் டெஸ்டில் கன்ஹாய் ரன் அவுட் ஆனார். எடுத்த ரன்கள் 99.இந்த தொடரைத் தொடர்ந்த பாகிஸ்தான் தொடரின் லாகூர் டெஸ்டில் ரோகன் கன்ஹாய் மற்றும் ஒரு இரட்டை சதத்தை பதிவு செய்தார். 32 பவுண்டரிகள் உதவியுடன் அவர் குவித்த ரன்கள் 217.

7 ஒரு நாள் பந்தயங்களில் 164 ரன்கள் எடுத்த இவரது சராசரி ரன்கள் 54.66.
முதல் ஒரு நாள் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இவர் நின்று ஆடி குவித்த 55 ரன்கள் மேற்கு இந்திய தீவுகள் அணி கோப்பையை வெற்றி பெற பெரிதும் உதவியது என்றால் மிகையாகாது.இவரது அறிமுக டெஸ்ட் 1957ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக பர்மிங்காம் மைதானத்தில்.இவர் விக்கெட் கீப்பர் ஆக அறிமுக டெஸ்டில் விளையாடியவர்.ஸ்கோர் 42 & 1

கடைசி டெஸ்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில். எடுத்த ரன்கள்.

2. & 7

இந்த டெஸ்டை இவர் கேப்டனாக வழி நடத்தினார். வருடம் 1974.
4 கேப்டன்கள் தலைமையில் விளையாடிய ரோகன் கன்ஹாய், கேப்டனாக திகழ்ந்தது 13 டெஸ்ட்டுகளில்.

இவர் பல அணிகளுக்கு முதல் தர கிரிக்கெட் ஆடியிருந்தாலும் குறிப்பிட தக்க அணி வார்விக்க்ஷய்யர்.இந்த அணிக்கு 10 முறை 1000 ரன்களுக்கு மேல் குவித்தவர்.முதல் தர கிரிக்கெட்டில் 421 ஆட்டங்களில் எடுத்த ரன்கள் 29250. சதங்கள் 86. அரை சதங்கள் 120. கேட்சுகள் 325.

இவர் ஒரு சிறந்த பேட்ஸ்மன் மற்றும் பீல்டராக திகழ்ந்தவர்.

oooooooooooooooooooooooooooooooooooooooooo

1941 ஆம் ஆண்டு அந்த கால கட்டத்தில் பம்பாயின் பைகுல்லா பகுதியில் பிறந்த ஜான் ஜமேசன் என்பவர் இங்கிலாந்து அணிக்காக 1971 ல் இந்திய அணிக்கு எதிராக தனது அறிமுக டெஸ்டை விளையாடினார். மன்செஸ்டர் மைதானத்தில்.

இவர் ஆடியது மொத்தம் 4 டெஸ்ட்டுகள் கள் மட்டுமே.
முதல் டெஸ்டில் எடுத்த ரன்கள்
15 & 28.

கடைசி டெஸ்ட் 1974. மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக. பிரிட்ஜ்டவுன் டெஸ்ட்.

ரன்கள்
3 & 9

4 டெஸ்ட்டுகளில் எடுத்த மொத்த ரன்கள் 214.
ஆனால் முதல் தர கிரிக்கெட்டில் வார்விக்க்ஷய்யர் அணிக்கு விளையாடிய பொழுது தனி முத்திரை பதித்தார்.
361 ஆட்டங்களில் எடுத்த ரன்கள் 18941. சதங்கள் 33. அரை சதங்கள் 90. பிடித்த கேட்சுக்கள் 255. ஸ்டம்பிங் 1.

இவர் பேட்டிங்கில் அப்பொழுது உலக ரிகார்டு முதல் தர கிரிக்கெட்டில் ஏற்படுத்தி உள்ளார்,பார்ட்னர்ஷிப்பில்.1974 ல் இரண்டாவது விக்கெட்டிற்காக ரோகன் கன்ஹாய் உடன் ஜோடி சேர்ந்து
465 * ரன்கள் குவிக்க உதவினார்.

ஜான் ஜமேசன் 240* , ரோகன் கன்ஹாய் 213*.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Monday, September 2, 2024, 20:41 [IST]
Other articles published on Sep 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+