For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உடைந்து போன சச்சின்.. அதிர்ச்சியில் சேவாக், கோலி.. கிரிக்கெட் உலகை உலுக்கிய டீன் ஜோன்ஸ் மரணம்!

மும்பை: ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் மறைவிற்கு மூத்த கிரிக்கெட் வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

2020ம் ஆண்டில் அடுத்தடுத்து பல முக்கிய பிரபலங்கள் மரணமடைந்து வருகின்றனர். அதிர்ச்சி தரும் வகையில் பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் இந்த வருடத்தில் நம்மை விட்டு நீங்கி விட்டனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் டீன் ஜோன்ஸ் இன்று மும்பையில் காலமானார். ஐபிஎல் வர்ணனைக்காக மும்பையில் தங்கி இருந்த அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.

கிரிக்கெட் உலகம்

கிரிக்கெட் உலகம்

இந்த நிலையில் டீன் ஜோன்ஸ் மறைவிற்கு கிரிக்கெட் உலகமே இரங்கல் தெரிவித்து வருகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், இந்திய வீரர்கள், முன்னாள் வீரர்கள், வர்ணனை குழுவில் இருக்கும் பலர் டீன் ஜோன்ஸ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

சச்சின் என்ன சொன்னார்

சச்சின் என்ன சொன்னார்

முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது இரங்கலில், டீன் ஜோன்ஸ் மறைவு என் இதயத்தை நொறுக்கிவிட்டது. ஒரு மிக சிறந்த ஆன்மா நம்மிடம் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது. அவருக்கு எதிரான என்னுடைய முதல் ஆஸ்திரேலிய தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அவரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் என்று சச்சின் குறிப்பிட்டு இருக்கிறார்.

சேவாக் இரங்கல்

சேவாக் இரங்கல்

முன்னாள் வீரர் சேவாக் தனது இரங்கலில், டீன் ஜோன்ஸ் மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னால் அதை கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை. எனக்கு விருப்பமான, பிடித்த வர்ணனையாளர் அவர். நான் பல சாதனைகளை செய்த நேரங்களில் எல்லாம் அவர்தான் வர்ணனை செய்து இருக்கிறார். அவர் உடன் எனக்கு நிறைய நல்ல நினைவுகள் உள்ளது. அவரை அதிகம் மிஸ் செய்வோம், என்று சேவாக் குறிப்பிட்டுள்ளார்.

சிஎஸ்கே அணி இரங்கல்

சிஎஸ்கே அணி இரங்கல்

சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ள இரங்கலில், டீன் ஜோன்ஸ் மறைவு எங்களுக்கு பெரிய அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. கிரிக்கெட் உலகிற்கு இது மிகப்பெரிய இழப்பு. அவருக்கும் சேப்பாக்கத்திற்கும் இடையிலான உறவு எப்போதும் நினைத்து பார்க்க கூடியது. அவரின் உறவினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

ரோஹித் மற்றும் கோலி

ரோஹித் மற்றும் கோலி

இது தொடர்பாக கோலி தெரிவித்துள்ள இரங்கலில் டீன் ஜோன்ஸ் மரண செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரின் குடும்பம் இந்த செய்தியை வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன். அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்று கூறியுள்ளார். ரோஹித் சர்மாவும் இந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

Story first published: Thursday, September 24, 2020, 19:16 [IST]
Other articles published on Sep 24, 2020
English summary
Cricket world condolences for the death of Former Australian player Dean Jones.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+