Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் சர்மா தான் அடுத்த கேப்டனா வரணும்.. பெருகும் ரசிகர்கள் ஆதரவு.. ஆனா வாய்ப்பில்ல ராஜா!

Recommended Video

WORLD CUP 2019 | கோலி மீது நடவடிக்கை எடுக்க பிசிசிஐ திட்டம்?

மும்பை : இந்திய அணியில் கேப்டனை மாற்ற வேண்டும், ரோஹித் சர்மாவை புதிய கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்கள் மத்தியில் வலுத்து வருகிறது.

இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் அரையிறுதியுடன் தோல்வி அடைந்து வெளியேறியது. அணி நிர்வாகத்தில், குறிப்பாக கேப்டன் கோலி, ரவி சாஸ்திரி மீது அணித் தேர்விலும், பேட்டிங் வரிசையிலும் சரியான முடிவுகள் எடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் உள்ளது.

ஏன் கேப்டன் மாற்றம்?

ஏன் கேப்டன் மாற்றம்?

இந்த நிலையில், தங்கள் இஷ்டத்திற்கு அணியில் மாற்றங்கள் செய்து வரும் கேப்டன் கோலி - பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ரோஹித் சர்மா ஏற்கனவே சில தொடர்களில் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி இருக்கிறார் என்பதால், அவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

வாசிம் ஜாபர் பதிவு

முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் இது குறித்து ட்விட்டரில் ஒரு பதிவிட்டு இருந்தார். அதில், "ஒருநாள் போட்டிகள் கேப்டன்சியை ரோஹித் சர்மாவிடம் கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டதா? அவர் 2023 உலகக்கோப்பையில் தலைமை ஏற்று வழிநடத்திச் செல்ல வேண்டும் என நான் நினைக்கிறேன்" என கூறி இருந்தார்

ரசிகர்கள் அமோக ஆதரவு

இந்த கருத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சிலர் கோலி தான் சரியான கேப்டன் என கூறினாலும், பலர் ரோஹித் சர்மாவை இப்போதே கேப்டனாக்க வேண்டும் எனவும் கூறி இருக்கின்றனர். சிலர் அது நடக்க வாய்ப்பு இல்லை. அதற்கு காரணம், அரசியல் என சுட்டிக் காட்டி உள்ளனர். அவற்றில் சில பதிவுகள் இங்கே -

யார் கேட்பார்கள்?

ஆனால் யார் கேட்பார்கள்? எல்லோரும் கோலி - ரவி சாஸ்திரி பேச்சை தான் கேட்கிறார்கள்.

கோலி மோசம்

பிசிசிஐ, ரோஹித் சர்மாவை கேப்டனாக்குவது குறித்து இப்போதாவது சிந்திக்க வேண்டும். கோலியின் கேப்டன்சி நகர்வுகள் மிகவும் மோசமானவை.

சரியான நேரம்

கோலி நல்ல பேட்ஸ்மேன். ஆனால், மோசமான கேப்டன். எனவே, கேப்டன்சியை மாற்ற இது தான் சரியான நேரம்.

வாய்ப்பில்லை

ஆனால், இது நடக்காது என்று கூறி, அதற்கு காரணம் என பிசிசிஐ அதிகாரி வினோத் ராய், சிஎஸ்கே அணி உரிமையாளர் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன், கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் தோனி பெயர்களை குறிப்பிட்டுள்ளார் இவர்.

Story first published: Sunday, July 14, 2019, 21:32 [IST]
Other articles published on Jul 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+