
இந்திய வீரர்கள் இல்லை
அந்த முக்கியமான பெருமை - தொடர் நாயகன் விருது. 2019 உலகக்கோப்பை தொடரில் இதுவரை அதிக ரன்கள், அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களில் இந்திய வீரர்கள் யாரும் முதல் இடத்தில் இடம் பெறவில்லை.

அதிக விக்கெட்
அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 24 விக்கெட்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் இருக்கும் ஷமி 14 விக்கெட்களுடனும், பும்ரா 14 விக்கெட்களுடனும், ஒன்பது மற்றும் பத்தாவது இடத்தில் இருக்கின்றனர்.

அதிக ரன்கள்
அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஷகிப் அல் ஹசன் 606 ரன்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாம் இடத்தில் ரோஹித் சர்மா 544 ரன்களுடன் இருக்கிறார். வார்னர், பின்ச் மற்றும் ஜோ ரூட் ஆகியோரும் 500 ரன்களுக்கும் மேல் குவித்து அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.

ஷகிப்பை முந்த முடியும்
வங்கதேசம் அனைத்து போட்டிகளையும் ஆடி முடித்துள்ளது. அதனால், ஷகிப் அல் ஹசன் மேற்கொண்டு ரன் குவிக்க முடியாது. அடுத்து இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு லீக் மற்றும் அரையிறுதிப் போட்டிகள் உள்ளன, எனவே, ரோஹித், வார்னர், பின்ச் உள்ளிட்டோர் அதிக ரன்கள் குவித்து ஷகிப்பை முந்த முடியும்.

ஷகிப் அல் ஹசன் அசத்தல்
இருந்தாலும், ரோஹித் உட்பட எந்த பேட்ஸ்மேனுக்கும் ஷகிப் அல் ஹசனை தாண்டி தொடர் நாயகன் விருது கிடைக்காது. காரணம், ஆல்-ரவுண்டரான ஷகிப் 606 ரன்களுடன், 11 விக்கெட்களும் வீழ்த்தி இருக்கிறார்.

மிட்செல் ஸ்டார்க்குக்கு வாய்ப்பு
எனவே, பேட்ஸ்மேன்கள் 700 ரன்களுக்கும் மேல் எடுத்தாலும், ஷகிப்பின் ரன்களுக்கும், விக்கெட்களுக்கும் அது ஈடாகாது. அதே போல, மிட்செல் ஸ்டார்க் 24 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். இன்னும் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாட உள்ள அவர் 30 விக்கெட்களுக்கும் மேல் வீழ்த்தினால் அவருக்கும் தொடர் நாயகன் விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது.

போட்டி போட முடியாது
இந்திய அணியில் ரோஹித் மட்டுமே தொடர் நாயகன் விருதுக்கு அருகே இருக்கிறார். ஆனால், அவரால் அதிகபட்சம் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை தான் பெற முடியும். விராட் கோலி 408 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள நிலையில், அவராலும் தொடர் நாயகன் விருதுக்கு போட்டி போட முடியாது என்றே கருதப்படுகிறது.

வாய்ப்பே இல்லையா?
அப்படி என்றால் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பே இல்லையா? ஒரே ஒரு வாய்ப்பு உள்ளது ரோஹித் சர்மா, அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் இரட்டை சதமும், மற்றொரு போட்டியில் சதமும் அடித்து 900 ரன்களுக்கும் மேல் எடுத்தால் தொடர் நாயகன் விருது வெல்லலாம். இதே வாய்ப்பு, வார்னர், பின்ச், ஜோ ரூட் ஆகியோருக்கும் உள்ளது.


Click it and Unblock the Notifications