Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திட்டம் போட்டுக் கொடுத்த கோலி.. சொதப்பிவிட்டு செமயாக திட்டு வாங்கிய ராகுல்!

லண்டன் : இந்திய அணி கேப்டன் விராட் கோலியிடம் தான் உலகக்கோப்பை தொடரில் மோசமாக திட்டு வாங்கியதாக துவக்க வீரர் ராகுல் கூறி இருக்கிறார்.

ஷிகர் தவான் காயமடைந்த நிலையில் ராகுல் அணியில் துவக்க வீரராக களமிறங்கி வருகிறார். ஒரளவு சிறப்பாகவே பேட்டிங்கும் செய்து வருகிறார். எனினும், ஒரு போட்டியில் கேப்டனிடம் திட்டு வாங்கி இருக்கிறார்.

ராகுல் நல்ல துவக்கம்

ராகுல் நல்ல துவக்கம்

தவானுக்கு மாற்றாக களமிறங்கும் ராகுல் எப்படி ஆடுவாரோ என்ற என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. அதை போக்கும் வகையில் அணிக்கு கை கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்து வருகிறார் ராகுல். இது வரை துவக்க வீரராக மூன்று போட்டிகளில் 57, 30, 48 ரன்கள் எடுத்துள்ளார்.

ராகுல் செய்யும் தவறு

ராகுல் செய்யும் தவறு

ஆனால், அவர் செய்யும் முக்கிய தவறு தான் அடிக்கும் 30, 40 ரன்களை சதமாக மாற்றும் வாய்ப்பை கோட்டை விட்டு விடுகிறார். தேவையில்லாத ஷாட் ஆடி தன் விக்கெட்டை தாரை வார்க்கிறார். இது குறித்து வெங்க்சர்க்கார் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து இருந்தனர்.

ஆப்கன் போட்டி

ஆப்கன் போட்டி

ஆப்கானிஸ்தான் போட்டியிலும் அது தான் நடந்தது. ராகுல் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்தப் போட்டியில் பேட்டிங்கில் இந்தியா மோசமாக தடுமாறியது. அந்தப் போட்டியின் போது தான் கோலியிடம் திட்டு வாங்கி இருக்கிறார் ராகுல்.

கோலி திட்டம்

கோலி திட்டம்

அந்தப் போட்டியில் பந்தின் வேகம் கணிக்க முடியாத அளவு இருப்பதை புதிதாக பேட்டிங் செய்ய வந்த கோலியிடம் கூறியுள்ளார் ராகுல். அதை வைத்து, "130-140 ரன்கள் வரை நாம் இருவரும் நிதானமாக ரன் சேர்ப்போம். அதன் பின் ஒருவர் அடித்து ஆடலாம்" என திட்டம் வகுத்து ராகுலிடம் கூறி இருக்கிறார் கோலி.

திட்டு வாங்கினார்

திட்டு வாங்கினார்

சரி.. சரி.. என தலையாட்டி விட்டு ராகுல் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் கோலி ராகுலை வெளுத்து வாங்கி திட்டி இருக்கிறார். இதை ராகுலே ஒரு பேட்டியில் "பெருமையாக" கூறி இருக்கிறார். தான் சில்லித்தனமாக தவறு செய்வதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார் ராகுல்.

சீக்கிரம் அதை மாற்றிக் கொண்டு சதம் அடிங்க ராகுல்!

Story first published: Friday, June 28, 2019, 21:52 [IST]
Other articles published on Jun 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+