Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சபாஷ்.. சரியான போட்டி.. விராட் கோலியின் முதல் இடத்துக்கு குறி வைத்த ரோஹித் சர்மா!

லண்டன் : 2019 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு அவரும் ரோஹித் சர்மா, ஐசிசி ஒருநாள் போட்டிகள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் புதிய உயரத்தை எட்டி இருக்கிறார்.

2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா தான்.

இந்த நிலையில், ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலிக்கு அடுத்த இடத்தில், மிக நெருக்கமாக இருக்கிறார்.

உலகக்கோப்பை ரன் குவிப்பு

உலகக்கோப்பை ரன் குவிப்பு

உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி 442 ரன்கள் குவித்துள்ளார் அவரது சராசரி 63.14 ஆகும். கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ரோஹித் சர்மா 647 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஐந்து சதங்கள் அடங்கும்.

ஐசிசி தரவரிசை

ஐசிசி தரவரிசை

ஐசிசி ஒருநாள் போட்டிகள் பேட்ஸ்மேன்கள் தரவரிசை உலகக்கோப்பை லீக் சுற்றின் முடிவில் வெளியிடப்பட்டது. இதில் விராட் கோலி தன் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். அவர் 891 புள்ளிகள் பெற்று இருந்தார். உலகக்கோப்பை தொடரின் செயல்பாடுகளால், கோலி 1 புள்ளி கூடுதலாக பெற்றார்.

ரோஹித் இரண்டாம் இடம்

ரோஹித் இரண்டாம் இடம்

ரோஹித் சர்மா உலகக்கோப்பை தொடரில் குவித்த ரன்கள் காரணமாக ஆறு புள்ளிகள் கூடுதலாக பெற்றார். அதன் மூலம் 885 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். கோலிக்கும், ரோஹித்துக்குமான இடைவெளி வெறும் ஆறு புள்ளிகளாக சுருங்கி உள்ளது.

ரோஹித் முந்துவாரா?

ரோஹித் முந்துவாரா?

ரோஹித் சர்மா உலகக்கோப்பை தொடருக்குப் பின்னும் இதே பார்மில் நீடித்து ரன் குவிக்கும் பட்சத்தில் விராட் கோலியை முந்தி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

இனி தனி ஆவர்த்தனம் இல்லை

இனி தனி ஆவர்த்தனம் இல்லை

ரோஹித் சர்மா முன்பு இருந்தே கோலிக்கு போட்டியாக இருந்தாலும், தற்போது மிகவும் நெருக்கமாக வந்துள்ளார். கோலி இதுவரை தரவரிசையில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடித்து தனி ஆவர்த்தனம் செய்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு போட்டியாக மற்றொரு இந்திய வீரர் வந்துள்ளார்.

Story first published: Sunday, July 7, 2019, 18:40 [IST]
Other articles published on Jul 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+