Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்தில் கோலி, தோனி.. ரோஹித் சர்மா மட்டும் இந்தியா திரும்பினார்.. வெடிக்கப் போகும் சர்ச்சை!

மும்பை : இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்தில் இருந்து வர கால தாமதம் ஆகும் என கூறப்பட்ட நிலையில் ரோஹித் சர்மா மட்டும் முன்னதாக இந்தியா வந்து சேர்ந்தார்.

ஏற்கனவே, இந்திய அணிக்குள் பிளவு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், மற்ற வீரர்கள் இங்கிலாந்தில் காத்திருக்கும் போது, ரோஹித் சர்மா மட்டும் இந்தியா திரும்பி இருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது.

இந்திய அணி தோல்வி

இந்திய அணி தோல்வி

2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியது. அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து இந்திய அணி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தது.

மாட்டிக் கொண்ட வீரர்கள்

மாட்டிக் கொண்ட வீரர்கள்

உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறாவிட்டாலும், இந்திய வீரர்கள் இந்தியா திரும்ப முடியாத நிலை இருந்தது. அதற்கு காரணம், பிசிசிஐ நிர்வாகத்தால், அனைத்து வீரர்களுக்கும் உடனடியாக டிக்கெட் பதிவு செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது.

இந்தியா வந்த ரோஹித் சர்மா

இந்தியா வந்த ரோஹித் சர்மா

இதனால், இந்திய வீரர்கள் ஜூலை 14க்கு பின்னரே இந்தியா திரும்புவார்கள் என கூறப்பட்டு வந்தது. விராட் கோலி, தோனி உள்ளிட்ட முக்கிய வீரர்களும் இங்கிலாந்தில் தான் இருக்கிறார்கள். இந்த நிலையில், ரோஹித் சர்மா மட்டும் கடந்த வெள்ளிக் கிழமை இந்தியா திரும்பினார்.

பிரச்சனையா?

பிரச்சனையா?

கடந்த இரு நாட்களாக இந்திய அணிக்குள் பிளவு இருப்பதாக செய்திகள் கசிந்து வருகின்றன. குறிப்பாக, ரோஹித் சர்மா தலைமையில் ஒரு குழுவும், கருத்து வேறுபாடு விராட் கோலி தலைமையில் ஒரு குழுவும் இயங்குவதாக கூறப்படுகிறது.

கருத்து வேறுபாடு

ரோஹித் சர்மா - விராட் கோலி இடையே உலகக்கோப்பை தொடரில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் குறித்து கருத்து வேறுபாடுகள் இருப்பதாக தெரிகிறது. அதனால் தான் ரோஹித் சர்மா இங்கிலாந்தில் இருக்க முடியாமல் உடனடியாக இந்தியா திரும்பி விட்டார் என்கிறார்கள். தற்போது லேசாக புகைந்து வரும் இந்த தகவல், விரைவில் பிசிசிஐ கூட்டத்தில் வெடிக்கலாம் என கூறப்படுகிறது.

Story first published: Sunday, July 14, 2019, 10:37 [IST]
Other articles published on Jul 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+