Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தனி ஆளாக பிரித்து மேய்ந்த பிராத்வைட்... மிரண்டு.. பயந்து.. வெற்றி பெற்ற நியூசிலாந்து!

மான்செஸ்டர் : வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து மெர்சலாகி, ஒரு வழியாக 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் மூன்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே ரன் குவித்தனர். கையில் சில விக்கெட்கள் மட்டுமே இருந்தாலும் சளைக்காமல் போராடிய அந்த அணி, பரிதாப தோல்வி அடைந்தது.

டக் அவுட் அதிர்ச்சி

டக் அவுட் அதிர்ச்சி

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் குப்டில், மன்றோ இருவரும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். அதன் பின் அனுபவ வீரர்கள் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தனர்.

நியூசிலாந்து 291 ரன்கள்

நியூசிலாந்து 291 ரன்கள்

வில்லியம்சன் 148 ரன்களும், ராஸ் டெய்லர் 69 ரன்களும் எடுத்து அணியை மீட்டனர். அதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் காட்ரேல் 4 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

கெயில் ரன் குவிப்பு

கெயில் ரன் குவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிறிஸ் கெயில் 87 ரன்கள் அடித்து சேஸிங் செய்ய கை கொடுத்தார். ஆனால், ஹோப் 1, பூரன் 1 ஹோல்டர் டக் அவுட் என வரிசையாக வெளியேறினர். ஹெட்மயர் 54 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.

மிரள வைத்த பிராத்வைட்

மிரள வைத்த பிராத்வைட்

பிராத்வைட் பின்வரிசை வீரர்களுடன் இணைந்து பொறுப்பாகவும், அதிரடியாகவும் ஆடினார். ஒரு பக்கம் விக்கெட்கள் வீழ்ந்து கொண்டே இருக்க தன் அதிரடியை கூட்டிக் கொண்டே போனார் அவர். கையில் 1 விக்கெட் இருக்க, கடைசி 3 ஓவர்களில் 33 ரன்கள் தேவை என்ற நிலையில், 48வது ஓவரில் 25 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியை மிரள வைத்தார். அப்போது நியூசிலாந்து வீரர்களுக்கு தோல்வி பயம் வந்து பதற்றமடைந்தது தெளிவாக தெரிந்தது.

வெற்றி

வெற்றி

12 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், 49வது ஓவரில் சிக்ஸ் அடித்து வெற்றியை உறுதி செய்ய நினைத்த பிராத்வைட் கேட்ச் கொடுக்க, நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிராத்வைட் சதம்

பிராத்வைட் சதம்

தனியாக போராடிய பிராத்வைட் சதம் கடந்து 101 ரன்களில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணியின் ட்ரென்ட் பவுல்ட் 4, பெர்குசன் 3 விக்கெட்கள் வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தனர்.

Story first published: Sunday, June 23, 2019, 3:04 [IST]
Other articles published on Jun 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+