Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சதம் அடித்துத் தள்ளும் ரோஹித் சர்மா.. காரணம் யுவராஜ் சிங் சொன்ன அந்த வார்த்தைகள்!

லீட்ஸ் : 2019 உலகக்கோப்பை தொடரில் வரிசையாக சதம் அடித்து வருகிறார் ரோஹித் சர்மா.

இதுவரை அவர் ஆடியதிலேயே இதுதான் சிறந்த கிரிக்கெட் தொடர் என்று சொல்லும் அளவுக்கு உள்ளது அவரது ஆட்டம்.

ரோஹித் சர்மாவின் இந்த உலகக்கோப்பை எழுச்சியின் பின் இருப்பது யுவராஜ் சிங் என்ற தகவல் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். யுவராஜ் சிங் சொன்ன ஒரு சிறிய விஷயம் தான் ரோஹித் சர்மாவின் உலகக்கோப்பை பயணத்தை புரட்டிப் போட்டுள்ளது.

ஐபிஎல் சொதப்பல்

ஐபிஎல் சொதப்பல்

2019 ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்படவில்லை. ரன் குவிக்க முடியாமல் திணறி வந்தார். சில போட்டிகளில் சிறப்பாக ஆடி இருந்தாலும், பல போட்டிகளில் சொதப்பினார். உலகக்கோப்பை தொடருக்கு முன் ரோஹித் பார்ம் அவுட் ஆகி விட்டார் என்றும் சிலர் விமர்சித்தார்கள்.

சகோதரர் யுவராஜ் சிங்

சகோதரர் யுவராஜ் சிங்

அப்போது தன் மூத்த சகோதரர் போன்ற யுவராஜ் சிங் தனக்கு ஆறுதல் கூறியதாக நெகிழ்ச்சியுடன் கூறினார் ரோஹித் சர்மா. ஐபிஎல் தொடரில் மோசமாக ஆடி வருவது பற்றி பேசிக் கொண்டு இருந்த போது, "எப்போது செயல்பட வேண்டுமோ அப்போது நீ அதை செய்வாய்" என்று யுவராஜ், ரோஹித்திடம் கூறி இருக்கிறார்.

யுவராஜ் என்ன சொன்னார்?

யுவராஜ் என்ன சொன்னார்?

மேலும், ரோஹித் கூறுகையில், 2011 உலகக்கோப்பை தொடருக்கு முன்பும் யுவராஜ் சிங் அதே போன்ற சூழ்நிலையில் தான் இருந்தார். அதிக ரன்கள் குவிக்கவில்லை. அவர் ஐபிஎல்-இன் போது நீ சரியான சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்றார். அதை தான் அவரும் செய்தார். அதனால் தான் அவர் (2011) உலகக்கோப்பை தொடரில் வெற்றிகரமாக இருந்தார்." என்றார்.

ஐந்து சதம்

ஐந்து சதம்

சரியான சூழ்நிலையில் இருப்பது முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டு ரோஹித் சர்மா, 2019 உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதம் அடித்து மிரள வைத்துள்ளார். இது உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனை ஆகும்.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

இந்த உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா 647 ரன்கள் குவித்துள்ளார். சச்சின் ஒரே உலகக்கோப்பை தொடரில் 673 ரன்கள் எடுத்ததே அதிகபட்சம். அடுத்து அரையிறுதிப் போட்டியில் ரோஹித் ஆடவுள்ள நிலையில், அந்த சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது. யுவராஜ் சிங் 2011 உலகக்கோப்பை வென்று கொடுத்ததை போல, ரோஹித் 2019 உலகக்கோப்பை தொடரை வென்று கொடுப்பாரா?

Story first published: Sunday, July 7, 2019, 16:37 [IST]
Other articles published on Jul 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+