இருந்த நாலு நல்ல டிக்கெட்டுக்கும் காயமாம்.. உலக கோப்பை லீக் சுற்றை தாண்டுமா இந்திய கிரிக்கெட் அணி?
சிட்னி: இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில், கோப்பையை வெல்ல முடியுமா என்ற சந்தேகம் அணி நிர்வாகத்தினரிடையே எழுந்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 14ம்தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ரோகித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா, முன்னணி பவுலர்கள் இஷாந்த் ஷர்மா, புவனேஸ்வர் குமார் ஆகிய நால்வரும் காயத்தால் அவதிப்பட்டுவருகின்றனர்.

7ம்தேதி உடல் தகுதி தேர்வு
இவர்களில் எத்தனை பேர் உடல் தகுதி பெற்றுள்ளனர் என்பது வரும் 7ம்தேதி நடைபெற உள்ள உடல் தகுதி தேர்வில் தெரியவந்துவிடும். இந்த நான்கு வீரர்களுக்கும் 2 வகை சோதனைகள் நடத்தி பார்க்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுவரை எந்த வீரரையும் தாய் நாடு திருப்பியனுப்பும் திட்டம் அணி நிர்வாகத்துக்கு இல்லை.

ரோகித் பரவாயில்லையாம்
இதில் மற்றவர்களைவிட ரோகித் ஷர்மா தனது தசை பிடிப்பு பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. "ரோகித் ஷர்மா 80 சதவீதம் அளவுக்கு குணமடைந்து விட்டார். ஆனால் பிற வீரர்கள் நிலை பற்றி உறுதியாக சொல்ல முடியவில்லை.

யாருக்கு எங்கெங்கு காயம்?
இஷாந்த் ஷர்மாவுக்கு முட்டி காயமும், புவனேஸ்வர் குமாருக்கு கணுக்கால் காயமும், ஜடேஜாவுக்கு தோள்பட்டை காயமும் ஏற்பட்டுள்ளது" என்று பிசிசிஐ வட்டாரத்தில் ஒருவர் தெரிவித்தார்.

நாம அப்போவே அப்படி..
ஏற்கனவே, நம்ம டீம், ஆஸ்திரேலியாவில் அலற, அலற அடி வாங்கியது. இந்த லட்சணத்துல அனுபவசாலிகள் எல்லாம், கையில சுளுக்கு, காலுல நடுக்கமுன்னு ஆப்சென்ட் ஆனா, லீக் சுற்றை தாண்டுவதே கஷ்டமாகிவிடும்போல இருக்கே.. அப்புறம் எங்க ஜெயிச்சி, கப்ப வாங்குறது.


Click it and Unblock the Notifications