Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேவலமாக இருக்கிறது! நம்ப முடியவில்லை.. ICC Worldcup வாய்ப்பை WI இழந்தது குறித்து வீரர்கள் கருத்து

மும்பை : உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெறாததற்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இரண்டு முறை சாம்பியன் ஆக இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது முதல் முறையாக உலகக் கோப்பை தொடரிலே பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், எவ்வளவு பெரிய கேவலம் இது. வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறவில்லை. திறமை மட்டும் இருந்தால் போதாது என்பதை தான் இது காட்டுகிறது.

cricket world expressing shocks over West indies not able to qualify in 2023 Worldcup

வீரர்களின் நலன் மற்றும் வீரர்களின் நிர்வாகிப்பது எப்படி என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும். நிர்வாகத்தில் அரசியல் தலையிடக்கூடாது. இதில் ஒரே ஒரு ஆறுதலான விஷயம் என்றால் இதைவிட இனி கேவலமாக வெஸ்ட் இண்டீஸ் அணி கீழ் செல்ல முடியாது என்பதுதான்.இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள கௌதம் கம்பீர் வெஸ்ட் இண்டீஸ் நான் நேசிக்கிறேன். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டையும் நான் நேசிக்கின்றேன்.

நான் இன்னமும் நம்புகிறேன் வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் நம்பர் ஒன் அணியாக வரும் என்று கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேபோன்று வசீம் ஜாபர் வெளியிட்டுள்ள டிவிட்டில், உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடுவது நிச்சயம் அவமானமான விஷயம். கரீபியன் கிரிக்கெட் அடி பாதாளத்திற்கு சென்று விட்டது என்பது அதிகாரப்பூர்வமாக நமக்கு தெரிந்து விட்டது.

நீங்கள் பெரும் வீழ்ச்சியை சந்தித்து விட்டீர்கள். இனி உங்களுக்கு மேலே வர தான் ஒரே வழி இருக்கிறது என்று ஜாபர் கூறியுள்ளார். இதைப் போன்று 2016 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வென்று தந்த கார்லோஸ் பிராத்வெயிட் வெளியிட்டுள்ள பதிவில், இந்த வீழ்ச்சி வரும் என்று முன்பே எதிர்பார்த்ததுதான். டி20யிலும் கடந்த உலக கோப்பையில் நாம் மெயின் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. வெள்ளை நிற கிரிக்கெட்டில் பல பிரச்சனைகளை நாம் சந்தித்து விட்டோம். இதற்கு மேல் நம்மால் கீழே செல்ல முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் பிஷப் வெளியிட்டுள்ள பதிவில் ஒரு நாள் கிரிக்கெட்டில் நாம் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறோம். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தங்களைப் பற்றி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் மீண்டும் பழைய நிலைமைக்கு வர அனைவரும் கை கொடுக்க வேண்டும். நாம் எப்படி இருந்தோமோ அதே போல் மீண்டும் பழையபடிக்கு திரும்ப வேண்டும் என்று இயன் பிஷப் கூறியுள்ளார்.

Story first published: Sunday, July 2, 2023, 16:38 [IST]
Other articles published on Jul 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+