Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆணவத்தின் உச்சம்.. வாக்கிங் சென்ற முதியவரை சட்டை காலரை இழுத்து அடித்த அம்பத்தி ராயுடு- வீடியோ

ஹைதராபாத்: காரை மெதுவாக ஓட்டுமாறு கூறிய முதியவரை சட்டை காலரை பிடித்து இழுத்து அடித்ததாக கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு மீது புகார் எழுந்துள்ளது.

ஹைதராபாத்தில் வசிக்கும் அம்பத்தி ராயுடு இன்று காலை அங்குள்ளராஜிவ்காகாந்தி சர்வதேச மைதானத்திற்கு தனது எஸ்யூவி வகை காரில் சென்றார். அதிவேகமாக கார் ஓட்டிய அவர், சாலையோரம் காலையில் வாக்கிங் சென்ற முதியவர்களை உரசும் வகையில் சென்றுள்ளார்.

இதை பார்த்த ஒரு முதியவர், காரை மெதுவாக ஓட்டுமாறு சத்தமாக தெரிவித்துள்ளார். இதனால் ராயுவுக்கு கடுமையாக கோபம் வந்துவிட்டதாம். காரை நிறுத்திய அவர் கீழே இறங்கி அந்த முதியவரிடம் தகராறு செய்துள்ளார்.

அடித்துள்ளார்

இருவருமே வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, வாக்கிங் சென்ற பிற முதியவர்களும், அம்பத்தி ராயுடு செய்தது தவறு என்று கூறியுள்ளனர். இதனால் கோபம் தலைக்கு ஏறிய ராயுடு, அந்த முதியவரை சட்டை காலரை பிடித்து அடித்துள்ளார். இதை பார்த்த ஏரியாவாசிகள் அதிர்ச்சியடைந்தனர். சில இளைஞர்கள் ஓடி வந்து அம்பத்தி ராயுடுவை விலக்கி விட்டுள்ளனர்.

வீடியோ

வீடியோ

சிலர் இந்த காட்சியை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துவிட்டனர். அந்த வீடியோ இப்போது வைரலாக சுற்றி வருகிறது. ஆனால், அந்த பெரியவரோ, ராயுவுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்க விரும்பவில்லை, பெயரையும் வெளியே தெரிவிக்க விரும்பாமல் சென்றுவிட்டார்.

மீடியாக்களுக்கு வெளியீடு

மீடியாக்களுக்கு வெளியீடு

விஜய் என்பவர் இந்த வீடியோவை மீடியாக்களுக்கு பகிரங்கமாக வெளியிட்டார். இதுபோன்ற அதிகார தோரணைகளை தன்னால் சகித்துக்கொள்ள முடியாது என்றும், எனவே நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்பதற்காக வீடியோவை வெளியிடுவதாகவும் விஜய் தெரிவித்தார்.

இவருக்கு புதிது கிடையாது

இவருக்கு புதிது கிடையாது

2005ம் ஆண்டு டிசம்பரில், ராயுடு மீது இதேபோன்ற சர்ச்சை எழுந்தது. ஆந்திர கிரிக்கெட் சங்க செயலாளர் சிவலால் யாதவ் மகன் அர்ஜுன் யாதவை அடித்ததாக ராயுடு மீது புகார் எழுந்திருந்தது. இருவரும் உக்கிரமாக மோதியபோது அம்பயர்கள்தான் வந்து விலக்கி விட்டனர்.

Story first published: Thursday, August 31, 2017, 18:30 [IST]
Other articles published on Aug 31, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+