Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பல்வேறு நகரங்களில் வீடு... டாப் பிராண்டெட் கார்கள்... ஜஸ்பிரித் பும்ராவின் சொத்து மதிப்பு இதுதான்!

அகமதாபாத்: இந்திய அணியின் நட்சத்திர விரர் ஜஸ்பிரித் பும்ராவின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.

Recommended Video

பல்வேறு நகரங்களில் வீடு.. Jasprit Bumrah-வின் சொத்து மதிப்பு எவ்வளோ தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது தவிர்க்கமுடியாத வீரராக ஜஸ்பிரித் பும்ரா திகழ்ந்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஐபிஎல்--ல் மும்பை அணிக்காக அறிமுகமான பும்ரா, பின்னர் தொடர் வெற்றியை மட்டுமே கண்டு வருகிறார்.

சமீபத்தில் இவருக்கும், தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேஷனுக்கும் திருமணம் நடைபெற்றது.

ஆண்டு வருமானம்

ஆண்டு வருமானம்

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை தவிர்த்து பிசிசிஐ-ன் ஆண்டு வருமான ஒப்பந்தத்தில் A+ பிரிவில் இடம்பெற்றுள்ள ஒரே வீரர் பும்ரா மட்டும் தான். இதனால் இவருக்கு ஆண்டு வருமானமாக ரூ.7 கோடி தரப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பிசிசிஐ ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களுக்கு தனி ஊதியம் வழங்குகிறது. அதில் பும்ராவுக்கு ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் என பெற்று வருகிறார்.

ஐபிஎல்

ஐபிஎல்

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக பும்ரா திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2018ம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தின் போது மும்பை அணியில் ரோகித் சர்மாவுக்கு அடுத்தப்படியாக தக்கவைக்கப்பட்டார். அப்படியென்றால் ஒவ்வொரு சீசனுக்கும் ரூ. 12 கோடியை சம்பளமாக பெறுகிறார்.

விளம்பரங்கள்

விளம்பரங்கள்

கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்திவ் வந்த ஜஸ்பிரித் பும்ரா தற்போது விளம்பரங்களிலும் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். தற்போது வரை அவர் ராயல் ஸ்டாக், ட்ரீம் 11, போட் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

எத்தனை வகை கார்கள்

எத்தனை வகை கார்கள்

பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் பலர் கார்கள் மீது ஈர்ப்பு அதிகமாகி டாப் பிராண்டட் கார்களை வாங்கி வீட்டிற்குள் நிறுத்திவைப்பார்கள். ஆனால் பும்ராவுக்கு கார்கள் மீது அவ்வளவாக நாட்டம் கிடையாது. அவரிடம் ரேஞ்ச் ரோவர், மெர்கண்டெய்ஸ் பென்ஸ், நிசான் ஆகிய 3 கார்கள் மட்டுமே உள்ளது.

அசையா சொத்து

அசையா சொத்து

பும்ரா தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அங்கு அவருக்கு உள்ள வீட்டின் சொத்துமதிப்பு ரூ.3 கோடியாகும். 2வதாக மும்பையில் அவருக்கு ரூ.2 கோடி மதிப்பில் சொத்து உள்ளது. இதுமட்டுமல்லாமல் புனேவிலும் பும்ராவுக்கு சில சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவை அனைத்தையும் வைத்து பார்த்தால் ஜஸ்பிரித் பும்ராவின் சொத்து மதிப்பு ரூ.30 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Story first published: Thursday, June 3, 2021, 21:49 [IST]
Other articles published on Jun 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+