ரோகித் சர்மாவின் வீடு திடீர் விற்பனை.. குழப்பத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்.. அப்படி என்ன பணத்தேவை?
புனே: மிகவும் செழிப்புடன் வாழ்ந்து வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா திடீரென தனது சொத்து ஒன்றை விற்று இருப்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் அதிகம் சம்பாதிக்கக்கூடிய வீரர்களில் ரோகித் சர்மாவும் முக்கிய இடத்தை வகிக்கிறார்.
ஐபிஎல், விளம்பர ஒப்பந்தங்கள், பிசிசிஐ-ன் 'ஏ +' பிரிவு என அதிக அளவில் வருமானம் வந்துக்கொண்டிருக்கிறது.

ஜாலி டூர்
ரோகித் சர்மா தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கலந்துக்கொண்டுள்ளார். அவருடன் அவரது மனைவி ரித்திகா மற்றும் மகள் சமைரா ஆகியோரும் இங்கிலாந்தில் ஜாலியாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. இந்த ஜாலி சுற்றுப்பயணத்திற்கு இடையே ரோகித்தின் அசையா சொத்து ஒன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வீடு விற்பனை
ரோகித் சர்மாவுக்கு புனேவில் உள்ள மலைப்பிரதேசமான லொனாவாலா என்ற இடத்தில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. மொத்தம் 6,259 சதுர அடி கொண்ட இந்த வீட்டினை தற்போது ரூ.5.25 கோடிக்கு விற்றுள்ளார் ரோகித் சர்மா. கடந்த மே 29ம் தேதியே ஒப்பந்தம் போடப்பட்டு ரூ.26 லட்சத்தை முன்பணமாக பெற்றுக்கொண்ட நிலையில் இன்று முழுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் குழப்பம்
ரோகித் சர்மாவின் அழகான லொனாவாலா இல்லம் குறித்த புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி இணையத்தில் வைரலாகும். ஆனால் அதனை தற்போது திடீரென ஏன் அவர் விற்பனை செய்தார், அப்படி என்ன அவசியம் என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அந்த வீட்டினை சுஷ்மா அசோக் சாரஃப் என்பவர் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

சொத்துக்கள்
இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும், தாங்கள் சுற்றுலா சென்றால் தங்குவதற்காக அல்லது முதலீடு செய்யும் பொருட்டு பல்வேறு பகுதிகளில் சொத்துக்களை வாங்கி வைத்து வருகிறார்கள். ரோகித் சர்மாவும் அப்படிதான் விடுமுறை நாட்களில் லொனாவோ இல்லத்திற்கு குடும்பத்தினருடன் சென்று வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications