Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொதப்பல் ஆட்டம்.. முதல் ஒருநாள் போட்டியில் மே.இந்திய தீவுகள் அணியிடம் இந்தியா பரிதாப தோல்வி!

கொச்சி: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐந்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, மூன்று டெஸ்ட் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. முதலில் ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது.

இதன்படி இரு அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கேரள மாநிலம் கொச்சியில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.

321 ரன்களைக் குவித்த மே. இந்தியா தீவுகள்

321 ரன்களைக் குவித்த மே. இந்தியா தீவுகள்

இதில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்களை குவித்தது.

சாமுவேல்ஸ் அபாரம்

சாமுவேல்ஸ் அபாரம்

அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக சாமுவேல்ஸ் 116 பந்துகளில் 126 ரன்கள் குவித்து அசத்தினார். இந்தியா தரப்பில் முகம்மது சமி 66 ரன்கள் விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சொதப்பல் ஆட்டம்

சொதப்பல் ஆட்டம்

இதையடுத்து 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்கத்தில் விறுவிறுப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் பின்னர் அடுத்தடுத்து மோசமான ஆட்டத்தால் அவுட் ஆகினர்.

சமாளித்த தவான்

சமாளித்த தவான்

இதனால் இந்திய அணி 114 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதே நேரத்தில் தவான் ஓரளவு சமாளித்து ஆடி 92 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

197 ரன்கள் மட்டுமே..

197 ரன்கள் மட்டுமே..

இருப்பினும் பின்வரிசை வீரர்களும் நிலைக்காததால் இந்திய அணி 41 ஓவர்களில் 197 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி வரும் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

Story first published: Thursday, October 9, 2014, 9:20 [IST]
Other articles published on Oct 9, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+