Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்.. அதுதான் லயோனல் மெஸ்ஸி.. குவார்டியோல் பதிவிட்ட ட்வீட்!

தோஹா: அர்ஜென்டினா ஜாம்பவான் வீரர் லயோனல் மெஸ்ஸி குறித்து குரோஷியா வீரர் குவார்டியோல் பதிவிட்ட ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா அணி தகுதி பெற்றுள்ளது. குரூப் சுற்றின் முதல் போட்டியில் சவுதி அரேபியா அணியிடம் அதிர்ச்சியை தோல்வியை அர்ஜென்டினா அணி சந்தித்தது.

இதனால் அர்ஜெனடினா அணி குரூப் சுற்றோடு வெளியேறும் என்று பலரும் விமர்சித்தனர். ஆனால் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி, ரசிகர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அதிக கோல்கள்

அதிக கோல்கள்

அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் பெருமை கொள்ளும் வகையில் அர்ஜென்டினா அணி விளையாடும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். அதற்கேற்ப ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றம் அடைந்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக அணி வெற்றிபெற்றதோடு மட்டுமல்லாமல், மெஸ்ஸியின் உலகக்கோப்பையின் டாப் கோல் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

 எமனாக வந்த குவார்டியாலோ

எமனாக வந்த குவார்டியாலோ

ஆனால் மெஸ்ஸி அடித்த கோல்கள் எல்லாவற்றையும் கடந்து, குரோஷியா அணிக்கு எதிரான போட்டியில் அவர் கொடுத்த பாஸ் ரசிகர்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால் குரோஷியா அணியின் தடுப்பாட்ட வீரரான குவார்டியோல் ஆட்டம் ஒவ்வொரு போட்டியிலும் பிரமிப்பை ஏற்படுத்தியது. 20 வயது மட்டுமே இளம் தடுப்பாட்ட வீரரான குவார்டியோல், முகமூடி அணிந்து கொண்டு எதிரணிகளுக்கு எமனாக இருந்தார்.

ஓயாத மெஸ்ஸியின் புகழ்

ஓயாத மெஸ்ஸியின் புகழ்

ஆனால் குரோஷியா அணிக்கு எதிரான போட்டியில் குவார்டியோலையும் கடந்து தனி ஒரு வீரனாக மெஸ்ஸி பந்தை உள்ளே கொண்டு சென்று ஆல்வரஸ்-க்கு ஒரு மேஜிக் பாஸை செய்தார். இதன் மூலம் அர்ஜென்டினா அணியின் வெற்றி உறுதியானது. இந்த போட்டி முடிவடைந்து இரண்டு நாட்கள் கடந்தும், மெஸ்ஸி கொடுத்த பாஸ் பற்றி பேச்சுகள் ஓய்வில்லை.

குவார்டியாலோ ட்வீட்

குவார்டியாலோ ட்வீட்

இந்த நிலையில் குவார்டியாலோ பதிவிட்ட ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. 2021ம் ஆண்டு குவார்டியாலோ பதிவிட்ட ட்வீட்டில், மெஸ்ஸி போன்ற ஒரு வீரர் 100 ஆண்டுகளுக்கு முறை நிகழும் மெஜிக் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் குவார்டியாலோவும் மெஸ்ஸியின் ரசிகர் என்று நிரூபணமாகியுள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Story first published: Thursday, December 15, 2022, 22:24 [IST]
Other articles published on Dec 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+