For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே vs காவ்யா மாறன்.. ஓப்பனிங் வீரருக்காக நடந்த பெரும் போராட்டம்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

கொச்சி: ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே ஓப்பனிங்கிலேயே நடந்த சண்டை சுவாரஸ்யத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.

2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தொடக்கம் முதலே ஐதராபாத் அணி ஆக்ரோஷமாக வீரர்களை வாங்கி வருகிறது.

இதில் டாப் ஆர்டரில் விளையாடக்கூடிய இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கிற்காக சிஎஸ்கே முயற்சி செய்தது. ஆனால் தொகையின் அளவு மிகவும் அதிகமாக சிஎஸ்கே விலகியது. இதன்பின்னர் அவரை ஐதராபாத் அணி 13. 25 கோடி கொடுத்து ஏலம் எடுத்தது.

கடும் போட்டி

கடும் போட்டி

சென்னை அணிக்கு மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய ஒரு அனுபவ வீரர் தேவை. அதற்கேற்றார் போலவே தொடக்கத்திலேயே மயங்க் அகர்வால் ஏலம் விடப்பட்டார். இதனையடுத்து சிஎஸ்கே ஏலத்தை கேட்க குதித்தது. ஆனால் இந்த முறையும் காவ்யா மாறன் அவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்தார். இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

காரணம் என்ன

காரணம் என்ன

பஞ்சாப் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட மயங்க் அகர்வால் ரூ. 2 கோடி என்ற அடிப்படை தொகையில் ஏலம்விடப்பட்டார். சிஎஸ்கே மற்றும் ஐதராபாத் அணிகள் மலமலவென தொகையை உயர்த்திக்கொண்டே செல்ல, ரூ. 5 கோடியை தாண்டி ஏலம் சென்றது. ஓப்பனிங்கிலேயே இவ்வளவு தொகை செல்ல வேண்டுமா என சற்று தயங்கிய போதும் விடாப்பிடியாக 5 கோடியை தாண்டி ஏலத்திற்குள் சென்றது.

பரபர கட்டம்

பரபர கட்டம்

2022ம் ஆண்டு ஐபிஎல்-லேயே நல்ல ரெக்கார்டை மயங்க் வைத்திருந்தால் இரு அணிகளுக்குமே விட்டுக்கொடுக்க மனமே இல்லை. இதனால் ரூ. 8 கோடியை தாண்டி செல்ல, சிஎஸ்கேவுக்கு தயக்கம் அதிகரித்துவிட்டது. இதனால் தொகை அதிகரித்தவுடனேயே அதிரடியாக போட்டியில் இருந்து விலகிக்கொள்கிறோம் என அறிவித்துவிட்டனர்.

இறுதியில் என்ன ஆனது?

இறுதியில் என்ன ஆனது?

இறுதியில் ரூ. 8.25 கோடி தொகைக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியே ஏலம் எடுத்துக்கொண்டது. முதலில் ராஜஸ்தானுடன் மோதி ஹாரி புரூக்ஸ், பின்னர் சிஎஸ்கேவுடன் மோதி மயங்க் அகர்வால் என காவ்யா மாறன் கெத்து காட்டியது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

Story first published: Friday, December 23, 2022, 15:40 [IST]
Other articles published on Dec 23, 2022
English summary
CSK and Kavya maran fights for the Mayank agarwal Makes interesting in IPL 2023 Mini auction
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+