
கொரோனா பாதிப்பு
ஐபிஎல் 2021 தொடரின் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுதது ஐபிஎல் 2021 தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு சிக்கல்களில் பிசிசிஐ தற்போது தவித்து வருகிறது

கொரோனா பாதிப்பு
கேகேஆர் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியருக்கு முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து சிஎஸ்கே பௌலிங் கோச் மற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்தது. இதையடுத்து டெல்லி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்களுக்கும் கொரோனா பாதிக்கப்பட்டது.

ஹஸ்ஸிக்கும் கொரோனா
தற்போது சிஎஸ்கேவின் பேட்டிங் கோச் மைக்கேல் ஹஸ்ஸிக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது டெஸ்ட் சாம்பிள்கள் மறு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த பரிசோதனை முடிவுகள் வந்த பின்பே இதுகுறித்து உறுதியான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் சிஎஸ்கே தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நெகட்டிவ் வருவதற்கு வாய்ப்பு
சில தினங்களுக்கு முன்பு சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதனுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு இதேபோல மறு டெஸ்ட்க்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து அவருக்கு கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்தது. அதேபோல மைக்கேல் ஹஸ்ஸிக்கும் வருவதற்கு வாய்ப்புள்ளதாக சிஎஸ்கே தரப்பில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்படும் அணி வீரர்கள்
கேகேஆர் மற்றும் சிஎஸ்கே அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கே முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்தே தொடரை தள்ளி வைக்கும் முடிவை பிசிசிஐ எடுத்தது. இந்நிலையில தற்போது சிஎஸ்கேவில் மற்ற ஒரு நபருக்கும் கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











