Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 10வது முறையாக இறுதிப் போட்டிக்கு சிஎஸ்கே தகுதி.. குஜராத்தை முதல் முறை வீழ்த்திய தோனி படை

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் சிஎஸ்கே அணி 10வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. சென்னையில் நடைபெற்ற முதல் குவாலிபையர் போட்டியில், சிஎஸ்கே அணி, நடப்பு சாம்பியன் குஜராத்தை எதிர்கொண்டது.

இதனையடுத்து களமிறங்கிய ருதுராஜ் மற்றும் கான்வே ஆகியோர் பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ருதுராஜ் டக் அவுட்டான நிலையில், அது நோ பால் என கொடுக்கப்பட்டதால் மீண்டும் ஒரு லைப் கிடைத்தது.

CSK Beat GT in Qualifier 1 and made in to IPL Finals for 10th time

ருதுராஜ் மட்டும் தான் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். பெரிய ஸ்கோர் நோக்கி சிஎஸ்கே செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 44 பந்துகளில் ருதுராஜ் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணி 10.3வது ஓவரில் தனது முதல் விக்கெட்டை இழந்தது.

சிவம் துபே 1 ரன்னில் வெளியேற, கான்வே 40 ரன்கள் சேர்த்தார். ராயுடு, ரஹானே அதிரடியாக விளையாட முயற்சித்து முக்கிய கட்டத்தில் தலா 17 ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் ஜடேஜா 22 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் சாஹா, சுப்மன் கில் ஜோடி பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சாஹா 12 ரன்களில் ஆட்டமிழக்க, பவர்பிளே முடிவதற்குள்ளே தோனி சுழற்பந்துவீச்சாளர்களை பந்து வீச அழைத்தார்.

CSK Beat GT in Qualifier 1 and made in to IPL Finals for 10th time

இதில் கட்டுக்கோப்பாக பந்துவீசிய தீக்சனா கேப்டன் ஹர்திக் பாண்டியா 8 ரன்களல் ஆட்டமிழந்தார்.இரண்டு சிக்சர்களை தொடர்ந்து விளாசி ஷனாகா, சிஎஸ்கே ரசிகர்களுக்கு பயம் காட்டினார். எனினும் ஜடேஜா, சிறப்பாக பந்துவீசி அவரது விக்கெட்டை கைப்பற்றினார். இதே போன்று அதிரடி வீரர் டேவிட் மில்லரையும் ஜடேஜா கிளீன் போல்ட் ஆக்கினார்.

ரஷித் கான் மட்டும் 16 பந்துகளில் 30 ரன்கள் விளாசி ஆட்டத்தை கடைசி வரை கொண்டு வந்தார். இதனால் அண்டர்டேக்கர் போல் குஜராத் மீண்டு எழுந்தது. எனினும் முக்கிய கட்டத்தில் ரஷித் கான், விஜய் சங்கர் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சிஎஸ்கே, 10வது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்றது. கடந்த முறை புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி, தற்போது இறுதிப் போட்டிக்கு வந்து தாங்கள் யார் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.

Story first published: Tuesday, May 23, 2023, 23:42 [IST]
Other articles published on May 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+