Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

8 புள்ளிகளை பெற்ற சிஎஸ்கே.. ரன் ரேட் வாய்ப்பில் சறுக்கல்.. சேப்பாக்கம் கோட்டை என நிரூபித்த CSK

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானம் சிஎஸ்கே அணியின் கோட்டை என மீண்டும் நிரூபித்துள்ளது. கடைசியாக விளையாடிய 24 போட்டிகளில் சிஎஸ்கே அணி 20 போட்டிகளில் வென்றுள்ளது.

ஐதராபாத் அணியை சிஎஸ்கே வை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஹாரி புருக், ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஹாரி புருக், ஒரு பவுண்டரி அடித்தார்.

CSK Beat SRH by 7 wickets and proves chepauk is unbreachable fortress

இதனையடுத்து தேஷ்பாண்டே வீசிய 2வது ஓவரின் முதல் பந்தில் ஹரி புருக்கை ரன் அவுட் செய்யும் வாய்ப்பை சிஎஸ்கே வீணடித்தது. எனினும் ஹரி புருக் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, அபிஷேக் சர்மா , ராகுல் திரிபாதி ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டது. எனினும் ராகுல் திரிபாதி 21 ரன்களிலும், அபிஷேக் சர்மா 34 ரன்களிலும் வெளியேறினர்.

இதனையடுத்து, தீக்சனா, ஜடேஜா ஜோடி இணைந்து ஐதராபாத் விக்கெட்டை வேட்டையாடியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஏய்டன் மார்க்ரம், கிளாசன், மாயங் அகர்வால ஆகியோர்12, 13மற்றும் 14ஆம் ஓவர்களில் அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியில் மார்கோ யான்சென் 17 ரன்களில் ஆட்டமிழக்க, சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ருதுராஜ் மற்றும் கான்வே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். ரஹானே, அம்பத்தி ராயுடு ஆகியோர் தலா 9 ரன்களில் வெளியேறினர்.

இதனால், சிஎஸ்கே அணி விரைவில் வெற்றி பெற்றுவிட்டு, ரன் ரேட்டை அதிகரிக்கும் என பிளானில் சரிவு ஏற்பட்டது. எனினும் தொடக்க வீரர் கான்வே அபாரமாக நின்று 57 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தார். இதில் 12 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்தார். இதன் மூலம் சிஎஸ்கே அணி 18.4 ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

Story first published: Friday, April 21, 2023, 23:15 [IST]
Other articles published on Apr 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+