Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தல போல வருமா? தோனி அணி தான் கெத்து…. முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தல்

Recommended Video

IPL 2019: Chennai vs Hyderabad | ஹைதராபாத்யுடனான வெற்றி குறித்து ஹர்பஜன் தமிழ் ட்வீட்- வீடியோ

சென்னை:நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன் ரைசர்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது.சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 37 ரன்களும், 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மனிஷ் பாண்டே 36 பந்துகளில் 61 ரன்களையும் குவித்தார்.

பின்னர் களமிறங்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதனால் சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 160 ரன்களை எடுத்தது.

சிறப்பான தொடக்கம்

சிறப்பான தொடக்கம்

பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக விளையாடியது. 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கையும் எட்டியது. அந்த அணியின் லிவிங்ஸ்டன் 44 ரன்களையும், ரகானே 39 ரன்களையும் எடுத்து அருமையான தளம் அமைத்து கொடுத்தனர்.

6வது இடத்துக்கு முன்னேற்றம்

6வது இடத்துக்கு முன்னேற்றம்

அடுத்து களமிறங்கிய சாம்சன் அவுட் ஆகாமல் 48 ரன்களை எடுத்து அந்த அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் ராஜஸ்தான் 5 வெற்றிகளை பெற்று 10 புள்ளிகளுடன் கொல்கத்தாவை பின்னுக்கு தள்ளி 6வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

சிஎஸ்கே தகுதி

அதன் காரணமாக சென்னை அணி பெற்றுள்ள வெற்றியின் அடிப்படையில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே, ஐபிஎல் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

மாற்றப்பட்ட போட்டிகள்

மாற்றப்பட்ட போட்டிகள்

அதே நேரத்தில், ப்ளே ஆப் மற்றும் இறுதிச் சுற்று போட்டிகளை அரைமணி நேரம் முன்னதாகவே துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இனி இந்தப் போட்டிகள் இரவு 7.30 மணிக்கே துவங்கும்.

அதிகமான நேரம்

அதிகமான நேரம்

இதுபோன்று நேர அவகாசம் அதிகரித்து நள்ளிரவு தாண்டி போட்டி நடப்பதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஜெய்ப்பூரில் துவங்க இருக்கும் பெண்களுக்கான டி20 போட்டிகளும் இரவு 7.30மணிக்கே துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Sunday, April 28, 2019, 12:06 [IST]
Other articles published on Apr 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+