Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவின் மெகா சொதப்பல்.. இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்? ரசிகர்கள் ஏமாற்றம்

மும்பை: ஐபிஎல் 15வது சீசன் சிஎஸ்கே அணிக்கு பெரும் சொதப்பலாக அமைந்தது. அதற்கு முழு காரணமும் சிஎஸ்கே நிர்வாகம் தான்.

நடப்பு சாம்பியனாக களமிறங்கியுள்ள சிஎஸ்கே, கிட்டதட்ட மெகா ஏலத்தில் ஒரு நல்ல அணியையே உருவாக்கியது.

ஆனால் சீசன் தொடங்குவதற்கு முதல் நாள் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தோனி அறிவித்தார்.

மெகா தவறு

மெகா தவறு

இது தான் பெரிய தவறு. சீசன் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு அறிவித்துவிட்டதால் அணி வீரர்களுக்கு ஒரு நிலையற்ற தன்மை ஏற்பட்டு, புதிய கேப்டன் கீழ் செயல்படுவது கடினமாக இருந்திருக்கும். சரி, அனுபவம் உள்ளவரையாவது புதிய கேப்டனாக நியமித்திருக்க வேண்டும் அல்லவா. அதிலும் சிஎஸ்கே தவறு செய்துவிட்டது.

ஜடேஜா ஏமாற்றம்

ஜடேஜா ஏமாற்றம்

தொழில்முறை கிரிக்கெட்டில் முன் அனுபவம் இல்லாத ஜடேஜாவை கேப்டனாக சிஎஸ்கே நியமித்தது பெரிய தவறு. இதனால் கேப்டன்ஷிப் அழுத்தம் காரணமாக, ஜடேஜா தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலுமே சொதப்பி ஏமாற்றம் அளித்தார். இது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

Recommended Video

தொடர் தோல்விகளால் ஏற்பட்ட அழுத்தம்.. Dhoni மீண்டும் CSK Captain ஆக பதவியேற்றது ஏன்?
பொம்மை கேப்டன்

பொம்மை கேப்டன்

சரி, கேப்டனாக ஜடேஜா சுதந்திரமாக செயல்பட்டாரா என்று கேட்டால், அதுவும் இல்லை. டாஸ் போடவும், ஆட்டம் முடிந்ததும் பேசவும் மட்டுமே கேப்டனாக ஜடேஜா செயல்பட்டார். மற்ற அனைத்துமே தோனி தான் பார்த்து கொண்டார். இதனால் ஜடேஜாவுக்கு மேலும் அழுத்தம் தான் அதிகரித்திருக்கும். எப்போதும் இரட்டை தலைமை ஒரு அணிக்கோ, நாட்டுக்கோ நல்லது அல்ல.

துக்ளக் தர்பார்

துக்ளக் தர்பார்

சரி, ஜடேஜா தான் எதிர்கால கேப்டன் என்று உறுதியான முடிவில் சிஎஸ்கே இருந்ததா என்று கேட்டால், அதுவும் இல்லை. தற்போது சீசன் பாதியில் அவர் ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் தோனியே கேப்டன் என்றால், அதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே என்ற நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது. பொதுவாக சிஎஸ்கே என்றால் யுத்திகளுக்கு பெயர் போன அணி, ஆனால் இம்முறை துக்ளக் தர்பார் போல் செயல்பட்டு மெகா சொதப்பலை செய்துவிட்டது.

Story first published: Sunday, May 1, 2022, 16:41 [IST]
Other articles published on May 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+