லக்னோ : ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் பவுலிங் ஒரு அளவுக்கு பலம் குன்றியதாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம், சிஎஸ்கே அணியில் ஸ்டார் பவுலர்கள் யாரும் இல்லை. சுழற்பந்துவீச்சாளர்களும், பேட்ஸ்மேன்களும் தான் சிஎஸ்கே அணியை காப்பாற்றி வருகிறார்கள்.
டாஸ் வென்ற கேப்டன் தோனி, பந்துவீசசை தேர்வு செய்தார். இதனையடுத்து சிஎஸ்கே வீரர்கள் ஆடுகளத்தை சிறப்பாக பயன்படுத்தி கொண்டு நெருக்கடி அளிக்கும் விதமாக பந்துவீசினர். மெயர்ஸ் 14 ரன்களில் மோயின் அலி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தீக்சனா வீசிய ஒரே ஓவரில் மனோன் வொஹ்ரா, குர்னல் பாண்டியா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதே போன்று ஸ்டோனிஸ் 6 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜாவின் அபார பந்தால் ஆட்டமிழந்தார். கரண் சர்மா 9 ரன்களில் மோயின் அலியின் ஓவரில் அவரிடமே பிடிப்பட்டார். 44 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணியில் பதோனி, நிக்காலஸ் பூரான் ஜோடி இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
நிக்கோலஸ் பூரான் 20 ரன்களில் பதிரானா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கிருஷ்ணப்பா கௌதம் 1 ரன்னில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய ஆயுஷ் பதோனி மட்டும் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தார். இதில் 4 சிக்சர்களும், 2 பவுண்டரிகளும் அடங்கும். லக்னோ அணி 19.2வது ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.