Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை உள்ளே கொண்டு வந்ததே.. உங்களை காலி பண்ணத்தான்.. சிஎஸ்கே செய்த டிரேடிங்.. இதுதான் காரணமா?

சென்னை: சிஎஸ்கே அணியில் ராபின் உத்தப்பா கொண்டு வரப்பட்டதே முக்கியமான ஒரு வீரர் மீது கேப்டன் தோனி நம்பிக்கை வைக்காததால்தான் என்று தகவல்கள் வருகிறது.

2021 ஐபிஎல் தொடருக்கும் 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னும் இரண்டு வாரங்களில் மினி ஏலம் சென்னையில் நடக்க உள்ளது.

இதற்காக புது புது வீரர்களை அணியில் எடுத்து, சிறப்பான அணியை உருவாக்கும் திட்டத்தில் ஐபிஎல் அணிகள் களமிறங்கி உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி எப்போதும் போல இந்த முறையும் வயதான வீரர்களை அணியில் எடுத்து வருகிறது.

 சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கே ஏற்கனவே 6 வீரர்களை ரிலீஸ் செய்துவிட்டது. இதனால் ஏலத்தில் இவர்களுக்கு ஏற்ற மாற்று வீரர்களை சிஎஸ்கே தேர்வு செய்யும் என்கிறார்கள். ஏலத்திற்கு முன்பாகவே ராஜஸ்தான் அணியில் ஆடி வந்த மூத்த வீரர் ராபின் உத்தப்பாவை சிஎஸ்கே அணி டிரேடிங் செய்து வாங்கியுள்ளது.

 மோசம்

மோசம்

கடந்த இரண்டு வருடமாக இவர் ஐபிஎல் போட்டிகளில் சரியாக ஆடவில்லை. இருந்தாலும் இவரை சிஎஸ்கே எடுத்துள்ளது. ராஜஸ்தான் அணியில் இவர் 3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் அதே தொகையை கொடுத்து சிஎஸ்கே இவரை வாங்கி உள்ளது.

காரணம்

காரணம்

சிஎஸ்கே அணியின் இந்த முடிவிற்கு ரெய்னாதான் காரணம் என்கிறார்கள்.ரெய்னா கடந்த சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் சரியாக ஆடவில்லை.கடந்த ஐபிஎல் சீசனிலும் இவர் சரியாக ஆடவில்லை. இதனால் ரெய்னாவிற்கு மாற்றாக இவர் கொண்டு வந்துள்ளனர்.

வாய்ப்பு

வாய்ப்பு

தொடக்கத்தில் ரெய்னாவிற்கு சில போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்படும். அதில் அவர் சொதப்பினால் உத்தப்பா களமிறக்கப்படுவார் என்கிறார்கள். ரெய்னா மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால்தான் உத்தப்பாவை தோனி இந்திய அணிக்குள் கொண்டு வந்தார் என்று கூறப்படுகிறது.

Story first published: Thursday, February 4, 2021, 13:34 [IST]
Other articles published on Feb 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+