அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
சென்னை: ராஜஸ்தான் அணியில் ஆடி வந்த மூத்த வீரர் ராபின் உத்தப்பாவை சிஎஸ்கே அணி டிரேடிங் செய்து வாங்கியுள்ளது.
ஐபிஎல் 2021 தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. வரும் மே மாதம்தான் ஐபிஎல் தொடர் நடக்கும் என்றாலும் பிப்ரவரி 11ம் தேதி இதற்கான மினி ஏலம் நடக்க உள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி வெளியே அனுப்பிய 6 வீரர்களின் பட்டியலும் வெளியாகி உள்ளது.
அதன்படி கேதார் ஜாதவ், முரளி விஜய், பியூஸ் சாவ்லா, ஹர்பஜன் சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.கடந்த சீசன் ஐபிஎல்லில் இவர்கள் யாரும் சரியாக ஆடாத நிலையில் இவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான்
ஆனால் புதிய திருப்பமாக ராஜஸ்தான் அணியில் ஆடி வந்த மூத்த வீரர் ராபின் உத்தப்பாவை சிஎஸ்கே அணி டிரேடிங் செய்து வாங்கியுள்ளது. இவரை மொத்தமாக ஏல தொகை கொடுத்து சிஎஸ்கே அணி வாங்கி உள்ளது. ராஜஸ்தான் அணியில் இவர் 3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் அதே தொகையை கொடுத்து சிஎஸ்கே இவரை வாங்கி உள்ளது.

ராபின்
இப்படி மொத்தமாக ஸ்பாட் பேமெண்ட் கொடுத்து வாங்கியதால் சிஎஸ்கே அணியிடம் 19.2 கோடி ரூபாய்தான் மீதம் உள்ளது. சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் இளம் வீரர்கள் எடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணி மீண்டும் பார்ம் இல்லாத மூத்த வீரரை தேர்வு செய்துள்ளது.

என்னா தல
கடந்த சீசனில் வீரர்களிடம் ஸ்பார்க் பார்க்கவில்லை என்று கூறிய தல தோனி தற்போது மீண்டும் மூத்த வீரரை அணியில் எடுத்து அதிர்ச்சி அளித்துள்ளார். இளம் வீரர்களை எடுங்கள் என்று சிஎஸ்கே பேன்ஸ் எல்லாம் அறிவுரை சொல்ல, சொல்ல அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் என்ற கதையாக ராபின் உத்தப்பாவை கடையில் ஆர்டர் செய்துள்ளார்.

சிக்கல்
கடந்த 2-3 சீசன்களாக கொல்கத்தா, ராஜஸ்தான் உள்ளிட்ட எந்த அணியிலும் ராபின் உத்தப்பா சரியாக ஆடவில்லை. அப்படிப்பட்டவரை சிஎஸ்கே அணி ஏலம் எடுத்துள்ளது. தோனியின் இந்த முடிவிற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

மாற்றம்
கேரள அணிக்காக இந்த முறை சையது முஷ்டாக் கோப்பை தொடரில் ராபின் உத்தப்பா நன்றாக ஆடினார். பல்வேறு போட்டிகளில் கேரளாவின் வெற்றிக்கு அவர் காரணமாக இருந்தார். இதை பார்த்து தோனி இவரை அணியில் எடுத்து இருக்கலாம் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications