Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாருங்க…. இந்த அடிதான் ஆட்டத்திலும்… சொல்லி அடிக்கும் தோனி.. செம மாஸ்

சென்னை: சிஎஸ்கே கேப்டன் தோனி, வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை அந்த அணி டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை அவரது ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

ஐபிஎல் 12வது சீசன் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் களம் காண்கின்றன. அதற்கான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன.

உலக கோப்பைக்கு முந்தைய முக்கியமான தொடர் என்பதால் ரசிகர்கள் மட்டுமல்லாது வீரர்களும் இந்த ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி உள்ளனர். இந்த தொடரில் சிறப்பாக முத்திரை பதிப்பவர்களுக்கு உலக கோப்பை அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 அணிகள் தீவிரம்

3 அணிகள் தீவிரம்

அதற்கேற்ப ஒவ்வொரு அணியும், அதன் வீரர்களும் தீவிரமாக வியூகங்களை வகுத்து வருகின்றன. இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன.

கோப்பை வெல்ல முடிவு

கோப்பை வெல்ல முடிவு

ஐபிஎல் தொடரின் வெற்றி அணியான சிஎஸ்கே மற்றும் ரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளுமே கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன.

மார்ச் 23ல் முதல் போட்டி

மார்ச் 23ல் முதல் போட்டி

வரும் 23ம் தேதி 12வது சீசன் தொடங்குகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ஆகிய அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில் அனைத்து அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வலைபயிற்சி வீடியோ

வலைபயிற்சி வீடியோ

முதன்முறையாக இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடும் யுவராஜ் சிங், வலை பயிற்சியில் ஆடிய வீடியோவை அந்த அணி நிர்வாகம் டுவிட்டரில் பகிர்ந்திருந்தது.

டுவிட்டரில் பகிர்வு

டுவிட்டரில் பகிர்வு

இந்நிலையில், சிஎஸ்கே கேப்டன் தோனி, வலைபயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை அந்த அணி டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. பொதுவாக ஸ்பின் பவுலிங்கில் சற்று திணறும் தோனி, அதனை எதிர்கொண்டு பயிற்சி எடுத்தார்.

வைரல் வீடியோ

அப்போது அற்புதமான ஷாட்டுகளை அடித்து மகிழ்ந்தார். சில பந்துகள் சிக்சருக்கு பறந்தன. அவரின் பயிற்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவரது இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

கடந்த சீசனில் ஒரேயொரு போட்டி மட்டுமே சென்னையில் நடைபெற்றது. எஞ்சிய போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டன. எனவே இந்த சீசனில் சிஎஸ்கேவின் ஆட்டத்தை ரசிகர்கள் அதிக அளவுக்கு முக்கியமாக கருதுகின்றனர்.

Story first published: Sunday, March 17, 2019, 16:03 [IST]
Other articles published on Mar 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+